ஸ்டாலின்,பிடிஆர், மா.சு.வை வறுத்தெடுக்கும் பாஜக

 

ஸ்டாலின்,பிடிஆர், மா.சு.வை வறுத்தெடுக்கும் பாஜக

டுவிட்டரில் தொடர்ந்து #தொடைநடுங்கிதிமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் அதிகம் அடிபடுவது நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் தான். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் பிளாக் செய்த நிதி அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜனின் செயலை குறிப்பிட்டு, பா.ஜ.க., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனின் டிவிட்டர் ஐடியை பிளாக்செய்து ஓட்டம் பிடித்த நிதியமைச்சர் PTR தியாகராஜன் என்று பதிவிட்டு, #தொடைநடுங்கிதிமுக என்ற ஹேஷ்டேக்கினை பகிருந்து வருகின்றனர்.

ஸ்டாலின்,பிடிஆர், மா.சு.வை வறுத்தெடுக்கும் பாஜக

ஒரு சட்டமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து பிளாக் செய்யும் அமைச்சரை தனது அமைச்சரவையில் நிதி அமைச்சராக வைத்திருக்கும் இந்த ஆட்சி கருத்து சுதந்திரம் ஜனநாயகம் குறித்தெல்லாம் பேசி வருவது வேடிக்கையாக இருக்கிறது! ஒரு எம் எல் ஏ வையே பிளாக் செய்யும் அமைச்சர் இந்த நாட்டு மக்களுக்கு எப்படி பதில் சொல்வார்? என்று கேட்கிறார் தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்.

பிடிஆர் ரெண்டு கையில வாட் கட்டியிருப்பதற்கும், ஏன் 2கைல 2 வாட்ச்ன்னா ஒன்னுல சின்ன முள் மிஸ்ஸிங் இன்னொன்ல பெறிய முள் மிஸ்ஸிங் என்றும் கூட பதிவிட்டு #தொடைநடுங்கிதிமுக ஹேஷ்டேக்கினை பகிருந்து வருகின்றனர். ஈஷா யோகா அறக்கட்டளை சத்குரு விவகாரத்தில், இனிமேல் ஈஷா பற்றி எதுவும் பேசமாட்டேன் என்றும், ஈஷா பற்றிய புதிய தகவல்கள் எதுவும் வெளியிடமாட்டேன் என்றும் சொன்னதால், #தொடைநடுங்கிதிமுக ஹேஷ்டேக் பகிரப்படுகிறது.

ஸ்டாலின்,பிடிஆர், மா.சு.வை வறுத்தெடுக்கும் பாஜக

சு.சாமி PSBB விவகாரத்தில் மாநில அரசு நேர்மையான விசாரணை செய்யப்பட வில்லையெனில், ஆட்சி கலைக்கப்படும் என்று கூறியதற்கு, திமுக தரப்பில் பயத்தினால் எந்த எதிர் கருத்தும் தலைவர்களிடம் இருந்து இல்லாததால், தொடை நடுங்கி hashtag என்று விளக்கம் கொடுத்தே, #தொடைநடுங்கி_திமுக என்ற ஹேஷ்டேக்கினை பகிர்ந்து வருகிறார்கள்.

கோவை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சென்று நோயாளிகளை முதல்வர் ஸ்டாலின் தூரத்தில் நின்று விசாரித்ததையும், மற்ற முதல்வர்கள் அருகில் சென்று விசாரித்ததையும் பதிவிட்டும் #தொடைநடுங்கிதிமுக பகிர்கிறார்கள்.

மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி பெற்று தரும் பணியை எல் .முருகன் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருவது பாஜகவின் கடமை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் சொன்னதற்கு, மத்திய அரசின் காலில் விழுந்த #திமுக… உலகளாவிய டெண்டர்னு உருட்டுனது என்னாச்சு #தொடைநடுங்கிதிமுக என்றும் பகிருந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். நெட்டிசன்களில் பெரும்பலானோர் பாஜகவினர் என்று தெரிகிறது.