இபிஎஸ் மனதை புட்டு புட்டு வைத்த கே.பி.எம் – ஓபிஎஸ் மனதின் குரல் என்ன?

 

இபிஎஸ் மனதை புட்டு புட்டு வைத்த கே.பி.எம் – ஓபிஎஸ் மனதின் குரல் என்ன?

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று பல தலைமை இருக்கிறது. இதையெல்லாம் முறைப்படுத்தி ஒற்றத்தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும், அதாவது பொதுச்செயலாளர் என்ற பதவியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும். ஆனால், பொதுச்செயலாளர் யார் என்கிற கருத்து வேறுபாட்டினால்தான் இருவரும் இருவேறு திசையில் பயணிக்கிறார்கள்.

இபிஎஸ் மனதை புட்டு புட்டு வைத்த கே.பி.எம் – ஓபிஎஸ் மனதின் குரல் என்ன?

இதை பயன்படுத்தி தான், சிலர் சசிகலாவை வைத்து குளிர்காய நினைக்கிறார்கள். அவர் அதற்கு இரையாகிவிடக்கூடாது என்கிறார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.

ஓபிஎஸ் – இபிஎஸ் இருவர் இடையே இருக்கும் மனக்கசப்பு குறித்த செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில்தான், ‘’கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாகுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கொரோனா முடியட்டும் நான் நிச்சயம் வர்றேன்.’’ என்று சசிகலா குரல் அதிமுகவினரிடையே ஆடியோ மூலம் ஒலித்தது. ஆனால், சசிகலா பேசியது அதிமுவினர் கிடையாது. அமமுகவில் உள்ளவர்களிடம்தான் என்கிறார் கே.பி.முனுசாமி. அப்புறம் அவரே, அவர் தனக்கு சாதகமான சிலரை வைத்துக்கொண்டு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. சசிகலாதான் ஏமாறுவார் என்கிறார்.

இபிஎஸ் மனதை புட்டு புட்டு வைத்த கே.பி.எம் – ஓபிஎஸ் மனதின் குரல் என்ன?

சசிகலாவின் ஆடியோ விவகாரம் அதிமுவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதுகுறித்து ஆலோசித்துவிட்டு, அந்த ஆலோசனையில் எடுத்த முடிவின்படிதான் கே.பி.முனுசாமி அப்படி பேசியதாக தகவல்.

ஜெ., மறைவுக்கு முன்னர் இருந்தே அதிமுகவில் சசிகலாவின் தொடர்பினை எதிர்த்து வருகிறார். அதனால்தான் சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவர் பின்னால் நின்றார் முனுசாமி. ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் இணைந்த பின்னரும் கூட சசிகலா எதிர்ப்பில் உறுதியாகவே இருக்கிறார் முனுசாமி. ஆனால், அன்றைக்கு சசிகலாவை எதிர்த்த ஓபிஎஸ், இன்றைக்கு அவரை சந்திக்கவும், அவரை கட்சிக்குள் கொண்டு வரவும் முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை, சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனையை கேட்க வில்லை போலிருக்கிறது.

இபிஎஸ் மனதை புட்டு புட்டு வைத்த கே.பி.எம் – ஓபிஎஸ் மனதின் குரல் என்ன?

முன்னர் சசிகலா ஆதரவு நிலையில் இருந்தாலும், இப்போது தீவிர சசிகலா எதிர்ப்பில் இருப்பதால்தான் எடப்பாடி பக்கம் சாய்ந்திருக்கிறார் முனுசாமி. அதனால்தான் அவரிடம் மட்டும் ஆலோசித்துவிட்டு பேட்டி அளித்திருக்கிறார் என்கிறது அதிமுக வட்டாரம்.

எந்த சூழ்நிலையிலும் சசிகலா அதிமுகவுக்குள் நுழைய முடியாது. அதற்காக வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலா குடும்பம் அதிமுகவை விட்டு தள்ளியே இருக்க வேண்டும் என்பது முனுசாமியின் முடிவா? அதிமுகவின் முடிவா? என்று தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இபிஎஸ் மனதை புட்டு புட்டு வைத்த கே.பி.எம் – ஓபிஎஸ் மனதின் குரல் என்ன?

முனுசாமியின் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம் தெரிந்துவிட்டது. அதே நேரத்தில் சசிகலா ஆடியோ விவகாரத்தில் ஓபிஎஸ்-ன் மனநிலை என்ன? என்பதையறிய துடிக்கின்றனர் கட்சியினர்.