உயிரையும் பணயம் வைத்துப்.. உள்ளே சென்றேன்… முதல்வர் விளக்கம்

உயிரையும் பணயம் வைத்துப்.. உள்ளே சென்றேன்… முதல்வர் விளக்கம்

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்ய நேற்று கோவைக்கு சென்றிருந்தார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், கொரோனா வார்டிற்கு சென்ற முதல்வர், PPE Kit அணிந்து, கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.

உயிரையும் பணயம் வைத்துப்.. உள்ளே சென்றேன்… முதல்வர் விளக்கம்

கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று சிகிச்சை பெற்று நோயாளிகளை முதல்வர் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின், “கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரையும் பணயம் வைத்துப்.. உள்ளே சென்றேன்… முதல்வர் விளக்கம்

சிகிச்சை பெறும் தங்கள் உறவுகளை தாங்கள் சந்திக்க முடியாதபோது, நேரில் சந்தித்து நலம் விசாரித்ததால், அக்குடும்பத்தினர் நெகிழ்ந்து போயிருக்கிறார்.

PPE Kit அணிந்து, கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தது குறித்து முதல்வர், ‘’Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

உயிரையும் பணயம் வைத்துப்.. உள்ளே சென்றேன்… முதல்வர் விளக்கம்

மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!’’ என்று தெரிவித்திருக்கிறார்.

உயிரையும் பணயம் வைத்துப்.. உள்ளே சென்றேன்… முதல்வர் விளக்கம்