சினிமா பாணியில் லாக்கப்பில் இருந்து தப்பிய ரவுடிகள்

 

சினிமா பாணியில் லாக்கப்பில் இருந்து தப்பிய ரவுடிகள்

வழிப்பறி, கொலை முயற்சி என்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கிட்டா என்கிற அஜித்குமாரையும் அவனது கூட்டாளிகளான அஜய் புத்தா, ஜெகதீஸ்வரன் ஆகியோரியும் கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்து வியாசர்பாடி காவல்நிலைய லாக்கப்பில் வைத்தனர்.

இவர்களை விடுவிக்க சொல்லி ஸ்டேஷனுக்கு வெளியே உறவினர்கள் நின்றிருந்தனர்.

சினிமா பாணியில் லாக்கப்பில் இருந்து தப்பிய ரவுடிகள்

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தால் அவர்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி ஓராண்டு தடுப்பு காவலில் வைக்கலா என்பதால், தங்களை அப்படி அடைத்துவிடுவார்கள் என்று மூன்று பேரும் பயந்து, எப்படியும் தப்பித்து விடவேண்டும் என்று திட்டம் போட்டனர்.

தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வது மாதிரி நடித்து, அப்போது சமாதானம் செய்ய போலீஸ் வரும்போது, எஸ்கேப் ஆகிவிடுவோம் என்று பேசிக்கொண்டு, மூன்று பேரும் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக்கொண்டனர். அருகில் கண்ணாடியை உடைத்து ஒருவரை ஒருவர் குத்துக்கொள்வது மாதிரி செய்தனர். இதைப்பார்த்த உறவினர்கள் லாக்கப்படை திறந்துவிடுமாறு சத்தம் போட்டனர். போலீசாரும் இதைப்பார்த்து அதிர்ந்து போயிருந்தனர்.

சினிமா பாணியில் லாக்கப்பில் இருந்து தப்பிய ரவுடிகள்

கண்ணாடியால் குத்திக்கொண்டால் விபரீதம் ஆகிவிடும் என்பதால், லாக்கப்பை திறந்து அவர்களை சமாதானம் செய்தார் உதவி ஆய்வாளர் ஆனந்த். இதுதன் சந்தர்ப்பம் என்று ஆனந்தை தாக்கி கீழே தள்ளிவிட்டு மூன்று பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

போலீசாருக்கு மட்டுமல்ல உறவினர்களுக்கு கூட, மூன்று பேரும் நடத்திய நாடகம் அப்போதுதான் தெரியவந்தது.

தப்பி ஓடிய ரவுடிகளில் அஜித்குமார் மீது 24 வழக்குகளும், அஜய்குப்தா மீது 20 வழக்குகளும், ஜெகதீஸ்வரன் மீது 20 வழக்குகளும் நிலுவையில் உள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

புளியம்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா உத்தரவின் பேரில் இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.