தெய்வத்தின் படத்திற்கு பதிலாக ஸ்டாலின் படம் இருப்பதாக எச்.ராஜா கொந்தளிப்பு

தெய்வத்தின் படத்திற்கு பதிலாக ஸ்டாலின் படம் இருப்பதாக எச்.ராஜா கொந்தளிப்பு

மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். தற்போது மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தெய்வத்தின் படத்திற்கு பதிலாக ஸ்டாலின் படம் இருப்பதாக எச்.ராஜா கொந்தளிப்பு

இந்நிலையில், ‘திமுக ஆட்சியிலும் ஸ்டிக்கர்’ என்ற தலைப்பில், நல திட்டங்களில் கட்சி தலைவர்களின் படங்களை பிரிண்ட் செய்வதை கடந்த காலங்களில் விமர்சித்த திமுகதான் இந்த கூத்து நடத்தியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கிரீன்வேஸ் சாலையில் பொதுமக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு வழங்கிய உணவு பொட்டலங்களில் முதல்வர் ஸ்டாலின்படம் மட்டுமல்ல, ஸ்டாலின் வாரிசு படமும் இடம்பெற்றிருந்தது என்று பத்திரிகையில் வெளிவந்த செய்தியை பகிர்ந்து,

தெய்வத்தின் படத்திற்கு பதிலாக ஸ்டாலின் படம் இருப்பதாக எச்.ராஜா கொந்தளிப்பு

’’இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து கோவில்களிலிருந்து விநியோகிக்கப்படும் உணவுப் பொட்டலங்களில் அக்கோவில் தெய்வத்தின் படம் இருப்பதுதான் சரி. இது அப்பட்டமான முறைகேடு.’’என்று பதிவிட்டிருக்கிறார்.

தெய்வத்தின் படத்திற்கு பதிலாக ஸ்டாலின் படம் இருப்பதாக எச்.ராஜா கொந்தளிப்பு