திமுக அரசாங்கத்தை தோற்கடித்தேன்… தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சாமி பரபரப்பு கடிதம்

திமுக அரசாங்கத்தை தோற்கடித்தேன்… தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சாமி பரபரப்பு கடிதம்

சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திமுக அரசாங்கத்தை தோற்கடித்தேன்… தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சாமி பரபரப்பு கடிதம்

இந்நிலையில் பாஜக மாநிலங்களவை எம்.பி. சுப்ரமணியன் சாமி, பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் உள்நோக்கத்தோடு நடவடிக்கை எடுத்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று தமிழக அரசுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கிய சில நாட்களிலேயே அது, ஜெர்மனியின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துவதாக சுவாமி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், தமிழகத்திலுள்ள ஞானி மற்றும் தியாகிகளான பிராமணர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச உணர்வு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சாமி ஆளுநருக்கு எழுதிய கடிதமும் வெளியாகி உள்ளது.

திமுக அரசாங்கத்தை தோற்கடித்தேன்… தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சாமி பரபரப்பு கடிதம்
திமுக அரசாங்கத்தை தோற்கடித்தேன்… தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சாமி பரபரப்பு கடிதம்

இந்நிலையில் மேலும் சுப்பிரமணியன் சாமி, ‘’கடந்த 25 ஆண்டுகளில் பல தடவைகள் நான் நீதிமன்றங்களில் திமுக அரசாங்கத்தை தோற்கடித்தேன். மீண்டும் திமுகவுக்கு சவால் விட விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.