’’மோடி உருவாக்கிய இந்தியா எங்கே? நேரு உருவாக்கிய இந்தியாவின் ஒரு பகுதி இங்கே… ’’

 

’’மோடி உருவாக்கிய இந்தியா எங்கே? நேரு உருவாக்கிய இந்தியாவின் ஒரு பகுதி இங்கே… ’’

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 57ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. 27.5.1964ல் தனது 74வது வயதில் மறைந்தார். அவரது நினைவு தினத்தை காங்கிரார் மட்டுமல்லாது பல்வேறு கட்சி தலைவர்களும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

’’மோடி உருவாக்கிய இந்தியா எங்கே? நேரு உருவாக்கிய இந்தியாவின் ஒரு பகுதி இங்கே… ’’

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ’’அடிமை இந்தியாவில் போராடிக்கொண்டே சுதந்திர இந்தியாவைப் பற்றி கனவு கண்டவர் நேரு. அந்த கனவுதான் பின்பு இந்தியாவை ஒரு மாபெரும் நவீன, ஜனநாயக நாடாக மாற்றியது. உலக அரங்கில் இந்தியாவிற்கென்று ஒரு அந்தஸ்தை உருவாக்கியது. இதைக் கட்டிக் காப்பதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி.’’என்கிறார்.

அவர் மேலும், ‘’நேரு யாரென்று தெரியாத பிஜேபியினருக்கு எளிதாக புரியும்படி சொல்கிறேன். இந்தியாவில் மோடி அழித்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் உருவாக்கிய மாபெரும் தலைவர்.’’என்கிறார்.

மேலும் ஜோதிமணி, ‘’ஒருவேளை நேருவுக்குப் பதிலாக மோடி இந்தியாவின் முதல் பிரதமர் ஆகியிருந்தால் இந்தியா என்கிற தேசம் இப்பொழுது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.’’என்று பதிவிட்டிருக்கிறார்.

நேருவின் பதவிக்காலம் 1947 -1964. இதில் அவரது சாதனைகளை பட்டியிலிட்டு, மோடி உருவாக்கிய இந்தியா எங்கே?நேரு உருவாக்கிய இந்தியாவின் ஒரு பகுதி இங்கே… என்று பட்டியலை சுட்டிக்காட்டுகிறார்.

அந்த பட்டியல்:
1947ல் 0.72% இருந்த ஜிடிபி 50 களில் 4% ஆக உயர்ந்தது.
1950ல் அரசியல் அமைப்புச் சட்டமுருவாக்கம். ஜனநாயகத் திருவிழாவுக்காக தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது.

1951ல் நாட்டின் வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தப்பட்டது. நாட்டின் தலைசிறந்த கல்விக்கூடமான ஐஐடி தொடங்கப்பட்டது.

1952ல் சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை நிறுவப்பட்டது.

’’மோடி உருவாக்கிய இந்தியா எங்கே? நேரு உருவாக்கிய இந்தியாவின் ஒரு பகுதி இங்கே… ’’

1953ல் மக்களின் நலன் கருதி ஏர் இந்தியா அரசுடமை

1954ல் உலகின் மிகபெரிய பக்ரா நங்கல் கால்வாய் கட்டமைப்பு பணிகள் தொடக்கம்.

1955ல் குடியுரிமை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

1956ல் நாட்டின் முதல் எய்ஸ்ம் மருத்துவமனை நிறுவப்பட்டது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவப்பட்டது.

1962ல் விண்வெளியில் சாதனை படைக்க ஐ. எஸ்.ஆர்.ஓ. தொடக்கம்.