ஜவாஹிருல்லா மீது வழக்கு தொடர எச்.ராஜா முடிவு

 

ஜவாஹிருல்லா மீது வழக்கு தொடர எச்.ராஜா முடிவு

திமுகவின் கட்சி விதிகளின்படி வேறு ஒரு கட்சியின் உறுப்பினராகவோ அல்லது மத அமைப்பில் உறுப்பினராக உள்ளவர் திமுகவின் உறுப்பினராக முடியாது. ஆனால் மமக வின் தலைவர் மற்றும் தமுமுக வில் உள்ள ஜவாஹிருல்லா திமுகவின் உறுப்பினர் என கூறி ஃபார்ம் பி தரப்பட்டுள்ளது. தேர்தல் வழக்குக்கு நல்ல விஷயம் என்று தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

ஜவாஹிருல்லா மீது வழக்கு தொடர எச்.ராஜா முடிவு

எச்.ராஜாவின் பதிவுக்கு முருகேசன் சிடிஆர் என்பவர் அளித்துள்ள பதிலில், அந்த விதி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் தோழமை கட்சி வேட்பாளர்களுக்கு பொருந்தாதுனு ஒரு உப விதி இருக்கே பார்க்கலியா பாஸூ என்று கேட்கிறார் .

அரசியல் விமர்சகன் ஆனந்த், ‘’நீங்களும் ஒரு வழக்கறிஞர். ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் அல்லது பொதுக்குழு நினைத்தால் ஒரு சின்ன தீர்மானத்தில் விதிகளில் மாறுதல் கொண்டுவர முடியும் என்பது தெரியாதா? உங்களுக்கு உண்மையிலேயே தெம்பும் திராணியும் இருந்தால் இது பற்றிய வழக்கு தொடருங்கள் கோர்ட்ல கேஸ் கண்டிப்பா நிக்காது’’என்று அடித்துச்சொல்கிறார்.