265 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை! – சென்னை பிரஸ் கிளப் ஏற்பாடு

 

265 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை! – சென்னை பிரஸ் கிளப் ஏற்பாடு

சென்னையில் 265 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பத்திரிகையாளர்களுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை பிரஸ் கிளப் இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 265 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பத்திரிகையாளர்களுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை பிரஸ் கிளப் இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு பத்திரிகையாளர் சந்திப்பையே ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை பிரஸ் கிளப் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. தேவைப்படுபவர்களுக்கு பரிசோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யத் தயாராக உள்ளதாக சென்னை பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது.

chennai-press-club-56

இது தொடர்பாக சென்னை பிரஸ் கிளப் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னையில் 50 – 100 எண்ணிக்கையில் மிக அவசியப்படும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே  கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பரிசோதனை செய்வதற்கு தமிழக சுகாதாரத்துறை – சென்னை மாநகராட்சியுடன் இணைந்து திட்டமிடப்பட்டிருந்தது. முதலில் ரேபிட் டெஸ்ட் கிட் என திட்டமிட்டு ஓமந்தூரார் அரசினர் தோட்ட மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும்,  திட்டமிட்ட எண்ணிக்கையை விட அதிகமாக 265 பத்திரிகையாளர்களுக்கு பிசிஆர் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன்  தகவல் தெரிவிக்கப்படும்.
தற்போதைய சூழலில் ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  நாள் ஒன்றுக்கு காலையில் 10 நபர்கள், பிற்பகலில் 10 நபர்கள் என 20 பேருக்கு மட்டுமே பிசிஆர் பரிசோதனை செய்ய இயலும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona-testing-56.jpg

இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சிகள் செய்து வருகிறோம். மேலும் பரிசோதனை முகாம்கள் நடத்தவும் முயற்சிகள் தொடர்கிறது. இந்த நிலையில் உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். பரிசோதனைக்கு கொரோனா நோய் அறிகுறிகள் தென்படும்  பத்திரிகையாளர்கள், களத்தில் இருக்கும் செய்தியாளர்கள் , புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 
பரிசோதனை தேவைப்படும் நண்பர்கள் , தங்கள் பெயர், வயது, பணியாற்றும் ஊடகம் ஆகியவற்றை  சென்னை பத்திரிகையாளர் மன்ற மேலாளரைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் போதும். பத்திரிகையாளர்கள் மத்தியில் கொரோனா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க நேரடி செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்க  ஊடக ஆசிரியர்கள் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”