ஊரடங்கை மீறிய பெண்ணுக்கு போலீஸ் கொடுத்த ’ஆம்புலன்ஸ்’தண்டனை!

 

ஊரடங்கை மீறிய பெண்ணுக்கு  போலீஸ் கொடுத்த ’ஆம்புலன்ஸ்’தண்டனை!

பட்டுப்புடவை, நகைகள் போட்டு ஆஸ்பிடலுக்கு போவதாக சொன்ன பெண்ணுக்கு போலீஸ் எஸ்.பி. கொடுத்த ஆம்புலன்ஸ் தண்டனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்பட்டுள்ளது. தளர்வுடன் கூடிய முழு ஊரடங்கினை அமல்படுத்தியபோது, அந்த தளர்வினை மக்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டு அவசியமின்றி வெளியே சுற்றி திரிந்தன. இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகமானது.

ஊரடங்கை மீறிய பெண்ணுக்கு  போலீஸ் கொடுத்த ’ஆம்புலன்ஸ்’தண்டனை!

இதையடுத்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ சேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தபட்டிருக்கிறது.

இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுத்து நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதையும் மக்கள் மீறிவிடுவார்கள் என்றுதான் ஆங்காங்கே செக் போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகிறார்கள் போலீசார்.

இந்நிலையில், கடலூர் அண்ணா பாலம் அருகே சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார் மாவட்ட எஸ்.பி. அபிநவ். அப்போது சிதம்பரத்தில் இருந்து வந்த காரை வழிமறித்து, காரில் இருந்த ஆணையும் பெண்ணையும் விசாரித்தார் எஸ்.பி.

ஊரடங்கை மீறிய பெண்ணுக்கு  போலீஸ் கொடுத்த ’ஆம்புலன்ஸ்’தண்டனை!

புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, கை,காது, கழுத்தில் நிறைய நகைகள் அணிந்துகொண்டு இருந்த அந்த பெண்ணை பார்த்தால் மருத்துவனைக்கு செல்வதுபோல் இல்லை என்று சந்தேகப்பட்ட, எஸ்.பி., ஆம்புலன்சை வரவழைத்து அதில் ஏறிச் செல்லச்சொன்னார்.

அப்பெண் ஏற தயங்கியபோது, மருத்துவமனைக்கு தானே போறீங்க. காரை விட இது பாதுகாப்பாக இருக்கும் என்றுசொல்ல, இல்ல சார், நாங்க சொந்த வேலையாத்தான் ஒரு இடத்துக்கு போறோம். எங்களை ஆஸ்பிடலுக்கு அனுப்பி வச்சிடாதீங்க என்று கெஞ்ச, ஊரடங்கு காலத்தில் இவ்வளவு தூரம் வந்தது தவறு என்றுசொல்லி, பேரிட மேலாண்மை சட்டத்தின்கீழ அவர்கள்மீது வழக்குபதிவு செய்து, அனுப்பி வைத்தார் எஸ்பி அபிநவ்.