விஜய் ரசிகர்களின் மனிதநேயம்: புதுகை மக்கள் நெகிழ்ச்சி

விஜய் ரசிகர்களின் மனிதநேயம்: புதுகை மக்கள் நெகிழ்ச்சி

கொரோனா ஊரடங்கினால் மனிதர்களே அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் மனிதர்களையே நம்பி இருக்கும் ஜீவராசிகளின் நிலை என்னவாகும்? தெருநாய்கள், குரங்குகள் மாதிரியான சிறு விலங்குகள் மனிதர்களை நம்பியே வாழ்ந்து வருகின்றன. இரக்குமுள்ளோர் அளித்து வந்த தண்ணீர், பால் பழங்களை உண்டு வாழ்ந்து வந்தன.

விஜய் ரசிகர்களின் மனிதநேயம்: புதுகை மக்கள் நெகிழ்ச்சி

ஊரடங்கிலும் இரக்கமுள்ளவர்கள் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மருத்துவக் கல்லூரி அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் பழங்கள், உண்டு வாழ்ந்து வந்தன.

விஜய் ரசிகர்களின் மனிதநேயம்: புதுகை மக்கள் நெகிழ்ச்சி

ஊரடங்கினால் பக்தர்களின் வருகை இல்லாததால் தண்ணீருக்கும் உணவுக்கும் அலைந்து திரிந்தன குரங்குகள். இதைக் கண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த ஆஞ்சநேயர் கோவில் அருகில் குடி தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர். அந்தத் தண்ணீர் தொட்டியின் அருகே பழங்கள் வைப்பதற்கு ஒரு சிறு தொட்டியும் அமைத்துள்ளனர்.

விஜய் ரசிகர்களின் மனிதநேயம்: புதுகை மக்கள் நெகிழ்ச்சி

தினந்தோறும் குரங்குகளுக்கு தண்ணீரும் உணவுப் பொருள் பழங்களை அளித்து வருகின்றனர் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த மனிதநேயம் புதுக்கோட்டை மக்களை நெகிழ வைத்திருக்கிறது.