தடுப்பூசிக்கு பயந்து நதியில் குதித்து தப்பிக்கும் மக்கள்!

 

தடுப்பூசிக்கு பயந்து நதியில் குதித்து தப்பிக்கும் மக்கள்!

கொரோனா இரண்டாவது அலையில் இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. புதிதாக மொத்தம் 2.22 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிய செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசிக்கு பயந்து நதியில் குதித்து தப்பிக்கும் மக்கள்!

இதனால் தடுப்பூசியில் கவனத்தில் செலுத்தி வருகிறது அரசு. தடுப்பூசி தேவைக்கு ஏற்ப கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்க, தடுப்பூசி போட்டுக்கொள்ளவே பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதும், உயிரிழப்பதுமான செய்திகளால் மக்கள் பீதியில் இருக்கிறார்கள். தமிழத்தில் பல கிராமங்களில் அதிகாரிகளும், செவிலியர்களும் கெஞ்சிப்பார்த்தும் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து வருகின்றனர். ஒரு கிராமத்தில் 7 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசிக்கு பயந்து நதியில் குதித்து தப்பிக்கும் மக்கள்!

அரசும் எத்தனையோ விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் மக்களிடையே நிலவும் அச்ச உணர்வு இன்னும் நீங்கவில்லை. உத்தரப்பிரதேசத்திலும் இதே நிலைமைதான் இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உச்சத்தில் இருப்பதால் அதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தடுப்பூசியில் கவனம் செலுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி என்றாலே விஷ ஊசி என்று நினைக்கிற அளவுக்கு வதந்தி பரவி விட்டதால், பாராபங்கி கிராமத்தில் மக்களுக்கு நம்பிக்கை தந்து தடுப்பூசி போட அதிகாரிகள், செவிலியர்கள் மட்டுமல்லாது, மாஜிஸ்திரேட் தலைமையிலான மருத்துவக்குழு சென்றது.

தடுப்பூசிக்கு பயந்து நதியில் குதித்து தப்பிக்கும் மக்கள்!

இதைப்பார்த்த அக்கிராமத்தினர் சராயு நதியில் குதித்து நீந்திச்சென்று தப்பித்து சென்றுவிட்டனர். இதனால் அதிகாரிகள், மாஜிஸ்திரேட் குழு அதிர்ச்சி அடைந்தது.