குஜராத் முதல்வராகிறாரா அமித்ஷா

 

குஜராத் முதல்வராகிறாரா அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநில முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று டெல்லி பாஜக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

குஜராத் முதல்வராகிறாரா அமித்ஷா

குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைகிறது. இதனால் அங்கு தேர்தல் நடத்த வேண்டியது இருக்கிறது. தற்போதைய பாஜக குஜராத் மாநில முதல்வரின் செயல்பாடுகளில் அம்மாநில மக்களுக்கு திருப்தி இல்லாமல் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறது பாஜக தலைமை.

கொரோனா தாக்கம் குஜராத்தில் அதிகம் இருக்கும் சூழலில் தற்போதைய முதல்வரால் செயல்பட முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. இதே நிலைமையில் சென்று தேர்தலை சந்தித்தால் தேர்தல் முடிவுகள் பாதகமாக முடியும் என்பதை உணர்ந்து, அதை இப்போதே சரி செய்ய நினைக்கிறது தலைமை. இந்த சூழலில் அமித்ஷாவை குஜராத் முதல்வர் ஆக்கினால் நிலைமையை சமாளிப்பார். தேர்தலில் வெற்றிக்கும் வழி வகுப்பார் என்று ஐந்து மத்திய அமைச்சர்கள் ஆலோசனை சொல்லி வருகிறார்களாம்.

அந்த ஐந்து அமைச்சர்களும் சேர்ந்து அமித்ஷாவை குஜராத்திற்கு தள்ளிவிட பார்க்க நினைப்பதில், ஒரு காரணம் இருக்கிறதாம். எந்த ஒரு விசயத்திற்கும் பிரதமர் இந்த ஐவர் குழுவை ஆலோசனை கேட்பதில்லையாம். இவர்களை பிரதமர் ஒதுக்கி வைத்ததற்கு காரணம், அமித்ஷாதான் என்று நினைக்கிறார்களாம் அந்த ஐந்து பேரும்.

அதனால்தான் அமித்ஷாவை எப்பாடு பட்டாவது குஜராத்துக்கு தள்ளிவிட்டு விட்டால், மோடியின் ஆலோசனை வட்டத்திற்குள் தாங்கள் சென்றுவிடலாம் என்று நினைக்கிறார்களாம்.