எடப்பாடியாரையும் கட்சியை விட்டு நீக்குவார்களா? அதிரடியில் இறங்கிய நிலோபர் கபில்

 

எடப்பாடியாரையும் கட்சியை விட்டு நீக்குவார்களா? அதிரடியில் இறங்கிய நிலோபர் கபில்

என்னை நீக்கியது போல் எடப்பாடியாரையும் கட்சியை விட்டு நீக்குவார்களா? என்று கேட்டு அதிரடியில் இறங்கியிருக்கிறார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்.

எடப்பாடியாரையும் கட்சியை விட்டு நீக்குவார்களா? அதிரடியில் இறங்கிய நிலோபர் கபில்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணிக்கும், நிலோபர் கபிலுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வந்தது. மோதலின் உச்சம்தான் நடந்த தேர்தலில் நிலோபர் கபிலுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்று நிலோபரின் ஆதரவாளர்கள் சொல்லி வந்தனர். இந்நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிலோபர் கபில் நீக்கப்படுவதாக கடந்த 21ம் தேதி அன்று அதிமுக தலைமை அறிவித்தது.

நிலோபரிடம் தனி செயலாளராக இருந்த பிரகாசம், சென்னை டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அரசு வேலை வாங்கித்தருவதாக 106 பேரிடம் 6 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார் நிலோபர் அந்தப்புகாரில் கூறியிருக்கிறார் பிரகாஷ்.

எடப்பாடியாரையும் கட்சியை விட்டு நீக்குவார்களா? அதிரடியில் இறங்கிய நிலோபர் கபில்

இந்த விவகாரம் குறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’நான் அமைச்சராக இருந்தவரைக்கும் எனக்கும் கட்சியில் மரியாதை இல்லை. என்னுடைய தொகுதியிலும் கட்சியினர் மரியாதை கொடுப்பதில்லை. அதனால் கட்சியில் இருந்து விலகுறேன் என்று தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தேன்.

2016ம் ஆண்டு தேர்தலில் எனது வெற்றிக்கு பிரகாஷ் பக்க பலமாக இருந்தார். அதனால் அவரை அரசியல் உதவியாளராக வைத்துக்கொண்டேன். ஆனால், வேலை வாங்கித்தருவதாக அவர் பணம் வாங்கியது எல்லாம் எனக்கு தெரியாது. அவர் பண பரிமாற்றம் செய்தது எதுவு எனக்கு என் மீது பொய்யான குற்றச்சாட்டினை சாட்டுகிறார் பிரகாஷ். 6 கோடி ரூபாய்க்காக என் பெயரைக் கெடுத்துக்கொள்வேனா? ஆனாலும் என் மீதான புகாரினை நான் சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

50 ஆயிரம், ஒருலட்சம் வாங்கும் நிலையிலா நான் இருக்கிறேன். பிரகாஷ் சொல்லும்போதுதான் இத்தனை பணம் கொடுத்து எமாந்திருக்கிறார்கள் என்கிற விஷயமே எனக்கு தெரியவந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்திலேயே ஜெயசுதா என்பவர் புகார் கூறியதுமே, அதுபற்றிய மோசடி தெரியவந்ததுமே எஸ்.பி. அலுவலகத்தில் பிரகாஷ் மீது புகார் கொடுத்துவிட்டேன்.

வேலை வாங்கித்தருவதாக யாரிடமாவது பணம் வாங்கி இருந்தால் அதற்கு பிரகாஷ்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நான் யாரிடமும் பணம்வாங்கவில்லை. வேண்டுமென்றால் என் வங்கிக்கணக்கினை தணிக்கை செய்துகொள்ளலாம்’’என்றவர்,

’’ஊழல் புகாரினால் என்னை நீக்கியதாக சொல்கிறார்களே, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறதே. அவர்களையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவார்களா? முன்னாள் முதல்வர் மீது இந்நாள் முதல்வர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அதற்காக அவர் கட்சி்யை விட்டு விலகிவிடுவாரா? இல்லை, நீக்கி விடுவார்களா?’’ என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.