திமுக குடும்ப நிகழ்ச்சியில் பாஜக

 

திமுக குடும்ப நிகழ்ச்சியில் பாஜக

தேர்தல் வரைக்கும் பாஜகவும் திமுகவும் கடுமையாக மோதல் போக்கினை கடைப்பிடித்தன. பாஜகவைவும், பாஜக அரசையும் திமுகவினர் விமர்சிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். வாரிசு அரசியல், ரடிசிய கட்சி என்று பிரதமே மோடியே திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இரு கட்சியினரும் சூமுகமான போக்கினையே கடைப்பிடித்து வருகிறார்கள்.

திமுக குடும்ப நிகழ்ச்சியில் பாஜக

திமுகவின் சூமூக உறவு குறித்துதான் டெல்லி பாஜகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டெல்லியில் மிகவும் செல்வாக்கான திமுக மூத்த எம்.பியும் பாஜக மூத்த அமைச்சருடன் அடிக்கடி பேசும் அளவிற்கு நல்ல தொடர்பு வைச்சிருகிறாராம்.

திமுக – பாஜக இடையேயான கசப்பான உறவு மேலும் மாறும் வகையில் அமைந்திருக்கிறது திமுக குடும்ப நிகழ்ச்சி. பாஜக சார்பில் மூத்த பெண் மத்திய அமைச்சர் அந்த விழாவில் பங்கேற்கிறார். இதனால் திமுக -பாஜக உறவு வலுப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் டெல்லி பாஜகவினர்.

தமிழ்மாநிலத்தின் நலன் கருதி மத்திய அரசுடன் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதற்கும் இந்த நிகழ்ச்சி நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என்று திமுகவினரும் கருதுவதாக தகவல்.