2,636 எலியை பிடிக்க 6 கோடி செலவு செய்த ரயில்வே! மெளஸ்-க்கு வந்த மவுசு!!

 

2,636 எலியை பிடிக்க 6 கோடி செலவு செய்த ரயில்வே! மெளஸ்-க்கு வந்த மவுசு!!

ஓர் எலியைப் பிடிக்க 22,334 ரூபாய் செலவாவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 

ஓர் எலியைப் பிடிக்க 22,334 ரூபாய் செலவாவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே துறையின் மிக அசுத்தமான ரயில்வே நிலையங்கள் பட்டியலில் சென்னை தொடர்ந்து முதலிடத்திலுள்ளது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகள் தூய்மையே இல்லாமல் இருப்பதாகவும், எலிகள் அதிகம் உள்ளதாகவும் ஒருவர் கடந்த ஜூலை 17 ஆம் தேதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தூய்மை படுத்தவும், எலிகளை பிடிக்கவும் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்றும் வினவியிருந்தார். 

Train

இதற்கு தற்போது பதிலளித்துள்ள தென்னக ரயில்வேயின் சென்னை மண்டலம், “கடந்த சில ஆண்டுகளாகவே எலித்தொல்லை அதிகமாக உள்ளது. எலிகளால் பல்வேறு இழப்புகளையும் ரயில்வே துறை சந்தித்து வருகிறது. மேலும், எலிகளை ஒழிக்க எங்கள் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்றாண்டுகளில் அதாவது, மே மாதம் 2016 முதல் ஏப்ரல் 2019 வரை மட்டுமே எலிகளை ஒழிக்க சென்னை மண்டல ரயில்வே சுமார் 5.89 கோடி ரூபாய் செலவழித்துள்ளது” என்று கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு மட்டும்  2,636 எலிகளைப் பிடித்துள்ளதாகவும் அதில், 1,715 எலிகள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளிலிருந்தும் மீதம் 921 எலிகளை ரயில்வே துறை பயிற்சி மையங்களிலும் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.