ஒருவருக்கு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தலாமா?

 

ஒருவருக்கு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தலாமா?

கொரோனா தடுப்பூசி எல்லோருக்கும் இரண்டு டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு டோஸ் தடுப்பூசி வேறு வேறு காலத்தில் செலுத்தப்படுகிறது. அதனால், ஒருவருக்கு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

ஒருவருக்கு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தலாமா?

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், ‘’அறிவியல் ரீதியாக இது சாத்தியம்தான். ஆனால், ஒருவர் வெவ்வேறு தடுப்பூசி மருந்துகளை செலுத்திக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கலாம் என்பதற்கு வலுவான சான்றுகள் எதுவும் தற்போது இல்லை.’’என்று சொல்லி இருக்கிறார்.

குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது குறித்து, 10-17 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு செரோபோசிட்டிவிட்டி விகிதம் தோராயமாக 30-40க்கு சமமாக இருக்கிறது. கொரோனா தொற்று நோயினை குழந்தைகளும் பரப்பக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.