அதிமுக கரைவேட்டி! அமைச்சருக்கு கிடைத்த பதிலடி!

 

அதிமுக கரைவேட்டி! அமைச்சருக்கு கிடைத்த பதிலடி!

ரேசன் கடைகள் மூலமாக அதிமுக ஆட்சியில் நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டபோது, ரேசன் கடைகளுக்கு அருகே அது குறித்து அந்தந்த பகுதி அதிமுகவினர் கட் -அவுட் வைத்தபோது, இது என்ன அதிமுக சார்பில் வழங்கப்படும் நிவாரணமா என்ன? அரசு வழங்கும் நிவாரணம்தானே. அப்புறம் எதற்கு அதிமுக சார்பில் விளம்பரம் என்று திமுகவினர் கோர்ட் வரைக்கும் சென்றார்கள்.

அதிமுக கரைவேட்டி! அமைச்சருக்கு கிடைத்த பதிலடி!

நிவாரணப்பணத்தை வழங்கும்போது, அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் பார்வையிட்டதற்கும் அப்போதைய எதிர்க்கட்சி திமுகவால் எதிர்ப்புகள் எழுந்தன. இப்போது ஆளுங்கட்சியாகி விட்ட திமுகவினர் அன்றைக்கு அதிமுகவினர் செய்ததையே செய்கின்றனர். கொரோனா நிவாரண பணம் கொடுத்த ரேசன் கடைகள் முன்பாக திமுக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டன. திமுக கவுன்சிலர்கள்தான் நிவாரண பணத்திற்கான டோக்கன் கொடுத்தனர். ரேசன் கடைகளில் பணம் வழங்கும்போதும், அங்கே நின்றுகொண்டு, திமுகவுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இது ஒன்றும் அதிமுக பணம் இல்லை; அரசு பணம் என்று சொன்னவர்கள், இப்போது மட்டும் திமுக பணம் என்பது மாதிரியே நடந்துகொள்கிறார்களே என்று மக்கள் முணுமுணுத்துச்சென்றனர்.

அதிமுக கரைவேட்டி! அமைச்சருக்கு கிடைத்த பதிலடி!

திமுக கவுன்சிலர்கள் மட்டுமல்ல, திமுக அமைச்சரே அப்படித்தான் நடந்து கொண்டிருந்திருக்கிறார். திருவெண்ணைய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் அரசின் தீர்வு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டிருக்கிறார்.

அதிமுக கரைவேட்டி! அமைச்சருக்கு கிடைத்த பதிலடி!

மூன்று பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய்கான காசோலையை வழங்கிய பொன்முடி, மூவரில் ஒருவர் அதிமுக கரை வேட்டியுடன் இருப்பதை பார்த்துவிட்டு, ’’அதிமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு நம்மகிட்ட வந்து பணம் வாங்குறாங்க’’ என்று முணுமுணுத்திருக்கிறார்.

உடனே அங்கிருந்தவர்களில் சிலர், ’’அவருக்கு கொடுத்தது அரசு நிதி. அது ஒண்ணும் திமுக நிதி கிடையாது’’ என்று முணுமுணுத்திருக்கிறார்கள். அங்கிருந்த ஒரு மூத்த பத்திரிகை நிருபர் இதை சத்தமாகவே சுட்டிக்காட்டியதாக தகவல்.