மூன்று காரணங்களால் மு.க.அழகிரி சந்திப்பை தவிர்த்த முதல்வர்!

 

மூன்று காரணங்களால் மு.க.அழகிரி சந்திப்பை  தவிர்த்த முதல்வர்!

திமுக வெற்றி பெற்றதும் குடும்ப உறுப்பினர்கள் பலரை நேரில் சென்று சந்தித்து மகிழ்ந்தார் ஸ்டாலின். சில குடும்ப உறுப்பினர்கள் அவர்களாகவே வந்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதில், அழகிரி குடும்பம் மட்டும் ஒதுங்கியே இருந்தது. பதவியேற்பு விழாவில் மட்டும் அழகிரியின் மகன், மகள் பங்கேற்றனர்.

மூன்று காரணங்களால் மு.க.அழகிரி சந்திப்பை  தவிர்த்த முதல்வர்!

கொரோனா காலம் என்பதால் அப்பா வரவில்லை. நிலைமை சரியானதும் அவர் வந்து ஸ்டாலினை வாழ்த்துவார் என்று சொல்லி இருந்தார் அழகிரி மகள் கயல்விழி. நிலைமை சரியானதும்.. என்று அவர் சொன்னது கொரோனா நிலைமை இல்லை என்பது மட்டும் கட்சியினருக்கும், ஏன் மக்களுக்கும் கூட தெரிந்ததுதான்.

நான் கட்சி தொடங்குறேனா.. தேர்தலில் போட்டிடுகிறேனா என்பது எல்லாம் முக்கியம் கிடையாது. ஸ்டாலின் முதல்வராக வரமுடியாது. வரவும் விடமாட்டேன் என்று சபதம் போட்டவர் அழகிரி. அப்படிப்பட்டவருக்கு ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததை ஜூரணித்துக்கொள்ள சில காலங்கள் ஆகும் என்கிறார்கள்.

மூன்று காரணங்களால் மு.க.அழகிரி சந்திப்பை  தவிர்த்த முதல்வர்!

இந்நிலையில் அரசு நிகழ்வுகள் சம்பந்தமாக நேற்று முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றார். கட்சியை விட்டு அழகிரியை நீக்கிய சமயத்தில், மதுரைக்குள் ஸ்டாலின் காலெடி எடுத்து வைக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்தவர் அழகிரி. ஆனால், முதல்வராக நேற்று முன் தினம் கெத்தாக மதுரைக்குள் ஸ்டாலின் நுழைந்ததை அழகிரி ரசித்திருக்க வாய்ப்பில்லை என்றே கட்சியினரிடையே பேச்சு.

நேற்று அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல் நாள் இரவே மதுரைக்கு சென்று தங்கிவிட்டார் ஸ்டாலின். அவர் மதுரைக்கு செல்லப்போகிறார் என்று பயணத்திட்டம் தயாரானதில் இருந்தே, மதுரையில் அழகிரி வீட்டுக்கு செல்வார் ஸ்டாலின் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஸ்டாலின் மதுரையில் இருந்தபோதும் கூட இதே மாதிரிதான் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், கடைசிவரைக்கும் அழகிரி வீட்டுக்கு செல்லாமல் அவர் மதுரையில் இருந்து திருச்சிக்கு போய்விட்டார்.

மூன்று காரணங்களால் மு.க.அழகிரி சந்திப்பை  தவிர்த்த முதல்வர்!

மரியாதை நிமித்தமாக, ஒரு சமரசம் செய்யும் நிகழ்வாக கூட கருதி ஸ்டாலின் அழகிரியை சந்தித்திருக்கலாம். ஆனால், அந்த சந்திப்பு நிகழாமல் போனதற்உ காரணம் என்ன? என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘’ஸ்டாலின் மதுரைக்கு வருகிறார் என்று தெரிந்ததுமே அழகிரி ஒரு அழைப்பு விடுத்திருக்கலாம். சென்னைக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்லாவிட்டாலும் கூட, வீட்டிற்கு வரவழைத்து வாழ்த்தியிருக்கலாம். அதற்கு ஒரு வாய்ப்பை அழகிரி ஏற்படுத்தவில்லை. அண்ணன் அழைக்கட்டுமே என்று தம்பி காத்திருந்திருக்கலாம். தம்பி வருவார் என்று அண்ணன் நினைத்திருக்கலாம்’’ என்றும் சொல்கிறார்கள்.

மூன்று காரணங்களால் மு.க.அழகிரி சந்திப்பை  தவிர்த்த முதல்வர்!

கட்சி்யில் அழகிரி நீக்கப்பட்டவர் என்பதால், தலைவரே சென்று சந்திப்பது சரியாகுமா? என்று ஸ்டாலின் யோசித்திருக்கலாம். ஆனாலும், அண்ணன் என்ற முறையில் அழகிரி அழைத்திருந்தால் தம்பி என்ற முறையில் ஸ்டாலின் சந்தித்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும். அரசு பணிகளுக்காக வந்த இடத்தில் சொந்த விசயங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் ஸ்டாலின் நினைத்திருக்கலாம்’’ என்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் என் இல்லத்திற்கு வருவதாக எனக்கு எந்த தகவலும் இல்லை என்றும், அண்ணன் வீட்டிற்கு தம்பி வருவது இயல்பானது. ஸ்டாலின் என் இல்லத்திற்கு வந்தால் வரவேற்பேன் என்றும் அழகிரி பின்னர் தெரிவித்திருந்ததை பார்த்தால், தம்பியின் வருகையை அவர் எதிர்பார்த்திருந்தாகவே தெரிகிறது.