நடிகர் வீரமணி கொரோனாவால் காலமானார்

 

நடிகர் வீரமணி கொரோனாவால் காலமானார்

நடிகரும், டப்பிங் யூனியனின் முன்னாள் தலைவருமான ஆர்.வீரமணி கொரோனாவால் காலமானார்.

தங்கமான ராசா, பொண்ணு வீட்டுக்காரன், பத்ரகாளி, சின்ன பூவே உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தார். நடிகர் நாகேஷுக்கு டூப்பாக பல படங்களில் நடித்துள்ளார் வீரமணி.

நடிகர் வீரமணி கொரோனாவால் காலமானார்

எம்.ஆர்.ராதாவின் நாடக குழுவில் இருந்த வீரமணியை எம்.ஆர்.ராதாவே சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார். தமிழ் படங்களில் நடித்துக்கொண்டு தெலுங்கு படங்களுக்கு டப்பிங் கலைஞராக இருந்து வந்துள்ளார்.

டப்பிங் யூனியன் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்த வீரமணி வயது மூப்பின் காரணமாக சினிமா உலகை விட்டு விலகி இருந்தார். மனைவி நாகரத்தினம், மகள்கள் சண்முகப்பிரி்யா, பவித்ரா, கவிதா ஆகியோருடன் சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

நேற்று அதிகாலையில் மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

நடிகர் வீரமணி கொரோனாவால் காலமானார்

வீரமணியின் மறைவு குறித்து டப்பிங் யூனியன் வெளியிட்டுள்ள இரங்கலில், ’’ஆர்.வீரமணி பல வருடங்களாக டப்பிங் யூனியனில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்தவர். 2004-2006 வரை டப்பிங் யூனியனின் தலைவராகவும் இருந்தவர். அமரர் எம்.ஆர்.ராதாவின் நாடக கம்பெனியில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரசியல் கட்சி தொடங்கியபோது தன்னை மும்முரமாக அதில் ஈடுபடுத்திக் கொண்டவர். பல டப்பிங் கலைஞர்களை அறிமுகம் செய்தவர்.

அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் வீரமணி. கொரோனா பாதிப்பினால் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தவர் இயற்கை எய்தினார் என்பதை அனைத்து டப்பிங் கலைஞர்கள் சார்பாகவும் ,டப்பிங் யூனியன் மற்றும அதன் தலைவர் ராதாரவி சார்பாகவும் மிக வருத்தத்தோடு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.