தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்… செல்லூர் ராஜூ

 

தமிழக  அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்… செல்லூர் ராஜூ

தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழக  அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்… செல்லூர் ராஜூ

மதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார் செல்லூர் ராஜு. தற்போது அந்த தொகுதியில் எம்.எல்.ஏ. என்கிற முறையில் அவர் அந்த ஆய்வினை மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’மருத்துவமனையில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அவற்றை அகற்றுவதே இல்லை. மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையினால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. நோயாளிகளுக்கு சத்தான உணவுகள் வழங்கவில்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதில் காலதாமதம் ஆகிறது’’ என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் மேலும், ‘’கொரோனா சிகிச்சை முறையில் தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்’’என்று வலியுறுத்திய அவர், ‘’தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரப்பி உள்ளது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.