பிராந்தியா?இருமல் மருந்தா? சானிடைசர் மிக்சிங்கில் சிக்கிக்கொண்ட போலி ’எக்ஸ்பிரஸ் பிராந்தி’ஓனர்கள்

 

பிராந்தியா?இருமல் மருந்தா? சானிடைசர் மிக்சிங்கில் சிக்கிக்கொண்ட போலி ’எக்ஸ்பிரஸ் பிராந்தி’ஓனர்கள்

ஊரடங்கினால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் மதுவிற்பனை கள்ளத்தனமாக நடந்து வந்தது போலீசுக்கு தெரியவந்தது. அதுவும் ‘எக்ஸ்பிரஸ் பிராந்தி’ ஒரே ஒரு சரக்குதான் புழக்கத்தில் இருந்ததும் தெரியவந்தது.

இதனால் போலி மதுவிற்பனை என்பது போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலி மது தயாரிக்கும் கும்பலை பிடிக்க போலீஸ் தேடி வந்தது.

பிராந்தியா?இருமல் மருந்தா? சானிடைசர் மிக்சிங்கில் சிக்கிக்கொண்ட போலி ’எக்ஸ்பிரஸ் பிராந்தி’ஓனர்கள்

குள்ளஞ்சாவடியில் போதையில் நடந்து வந்த குடிமகனிடம், போலீஸ் உடையில் இல்லாமல் வந்த போலீசார், சரக்கு எங்க கிடைக்கும்? என்று கேட்டபோது, அவர் அழுதிருக்கிறார்.

எங்கே கிடைக்கும் என்று கேட்டால் ஏன் எழுவுறீங்க? என்று கேட்டதும், 230 ரூபா வாங்கிக்குறாங்க. ஆனா, குடிச்சா இருமல் மருந்து மாதிரி இருக்குது என்று சொல்லிவிட்டு புலம்பியிருக்கிறார்.

அந்த குடிமகன் கைகாட்டிய இடத்திற்கு சென்று, போலி மதுபான கும்பலை அலேக்காக தூக்கினர்.

சானிடைசர் கேன்களை வாங்கி, அதில் எத்தனால், ரசாயண பவுடர், தண்ணீர் கலந்து விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டது அந்த கும்பல்.

பிராந்தி கலருக்காக கலந்த ரசாயண பவுடர் கலவை ஒரு மாதிரியாக போய் இருமல் மருந்து மாதிரி இனிப்பாக மாறியதால், பலரும் குறை கூறி வந்த நிலையில் தற்போது சிக்கிக்கொண்டது கும்பல்.

இதைக்குடித்தால் வயிற்று கோளாறுகள் ஏற்படும், நரம்புகள் பாதிக்கப்பட்டு கண்பார்வை பறிபோகும் அபாயமும் இருக்கிறது. அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் போலீ மது தயாரித்த உத்திராபதி, முள் ஓடை அன்பு, வடமலை, ராமலிங்கம்,மணிகண்டன், தண்டபாணி, ரகுபதி, ராஜேஷ்குமார், ஸ்ரீதர் என 9 பேரை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.

இந்த கும்பலிடமிருந்து 400 லிட்டர் சானிடைசர், 2500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள், போலி ஸ்டிக்கர்கள், மது தயாரிக்கும் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.