அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம்… கனிமொழி உருக்கம்

 

அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம்… கனிமொழி உருக்கம்

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) நேற்று காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடல், செவ்வாய்கிழமை இன்று மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம்… கனிமொழி உருக்கம்

அவரின் மறைவு குறித்து தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ‘’எழுத்தாளர் திரு.கி.ரா அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். தூத்துக்குடி மாவட்டம், இடைச்செவல் கிராமத்தில் பிறந்த அவர், கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன், கரிசல் வட்டார அகராதியைத் தொகுத்ததன் மூலம், வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர்.’’என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம்… கனிமொழி உருக்கம்

மேலும், ‘’பழகுவதற்கு இனியவர். அவரை நான் பல முறை சந்தித்த போதெல்லாம் அவரது தெளிந்த சிந்தனையையும், நகைச்சுவை உணர்வையும் கண்டு வியந்திருக்கிறேன். சென்ற முறை பாண்டிச்சேரி சென்ற போது அவரையும் அவரது மனைவி கணவதி அம்மையாரையும் நேரில் சந்தித்து மகிழ்ந்தேன். இப்போது இருவருமே நம்மிடையே இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றும் கனிமொழி உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார்.