Home தமிழகம் பிரபல எழுத்தாளர் கி.ரா. எனும் கி.ராஜநாராயணன் மறைந்தார்

பிரபல எழுத்தாளர் கி.ரா. எனும் கி.ராஜநாராயணன் மறைந்தார்

கரிசல் இலக்கிய தந்தை என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன்(99) நேற்று காலமானார். புதுச்சேரியில் வசித்து வந்த அவர், மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

பிரபல எழுத்தாளர் கி.ரா. எனும் கி.ராஜநாராயணன் மறைந்தார்
பிரபல எழுத்தாளர் கி.ரா. எனும் கி.ராஜநாராயணன் மறைந்தார்

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடல், செவ்வாய்கிழமை இன்று (18ம் தேதி) மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் 1923 இல் பிறந்தவர் ராஜநாராயணன். ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்பதுதான் கி.ரா.வின் முழுப்பெயர்.

பிரபல எழுத்தாளர் கி.ரா. எனும் கி.ராஜநாராயணன் மறைந்தார்

1958ம் ஆண்டில் சரஸ்வதி இதழில் இவர் எழுதிய முதல் கதை வெளிவந்தது. கி.ரா. அடிப்படையில் ஒரு விவசாயி. இவரது கதையுலகம் கரிசல் மண் சார்ந்தவை. கரிசல் வட்டாரத்தின் அகராதி என்று மக்கள் தமிழுக்கு ஒரு தனியாக ஒரு அகராதியை உருவாக்கி காட்டினார். புதுச்சேரி பல்கல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்தவர்.

கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் நாவல்களை எழுதிய கி.ரா., கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். மாபெரும் கதைசொல்லி கி.ராவின் கிடை என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம், ’ஒருத்தி’. .

இவர் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1999 சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் சாகித்ய அகாடமி விருது தமிழக அரசின் விருது கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு கி.ராவின் மனைவி கணபதி அம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

பிரபல எழுத்தாளர் கி.ரா. எனும் கி.ராஜநாராயணன் மறைந்தார்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… புதுமாப்பிள்ளை பலி!

கன்னியாகுமரி கன்னியாகுமரி அருகே உறவினர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். குமரி...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக ஏன் போராடவில்லை? – பாஜகவை விளாசிய செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

மனுவில் சர்ப்ரைஸ் வைத்த இளம்பெண்… திறந்துபார்த்து உருகிப்போன முதல்வர் ஸ்டாலின்!

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக நீரை மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் 12ஆம் தேதி திறந்து வைத்தார். மேட்டூர் அணையைத் திறந்துவைத்த திமுகவைச் சேர்ந்த முதல்...

3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...
- Advertisment -
TopTamilNews