தமிழக தேர்தலில் 20 பாஜக வேட்பாளர்களுக்கும் ரூ.260 கோடி கறுப்பு பணம் செலவா? லீக் ஆன எஸ்.வி.சேகர் பேச்சு

 

தமிழக தேர்தலில் 20 பாஜக வேட்பாளர்களுக்கும் ரூ.260 கோடி கறுப்பு பணம் செலவா?  லீக் ஆன  எஸ்.வி.சேகர் பேச்சு

டந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜக 230 கோடி ரூபாய் வரை கறுப்பு பணத்தை செலவிட்டிருக்கிறது என்று பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று அக்கட்சியின் பிரமுகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட தகவலை அடுத்து 20 வேட்பாளர்களுக்கும் தலா 13 கோடி என்றால் மொத்தம் 260 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது பாஜக என்ற தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக தேர்தலில் 20 பாஜக வேட்பாளர்களுக்கும் ரூ.260 கோடி கறுப்பு பணம் செலவா?  லீக் ஆன  எஸ்.வி.சேகர் பேச்சு

சட்டப்பேரவை தேர்தல் குறித்து சமூக வலைத்தளமான twitter spaceல் விவாதம் ஒன்று நடந்தது. பாஜக ஆதரவாளர்கள் இடையே இந்த உரையாடல் நடந்தது. பாஜக ஆதரவாளர்கள் என்பதால் அவர்களுக்குளு வெளிப்படையாக பேசிக்கொண்டார்கள். உரையாடலின்போது பேசிய எஸ்.வி.சேகர், நமக்குள்ளதான் பேசிக்கிறோம். அதனால சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, நடந்த சட்டன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் கொடுத்திருக்காங்க என்று தான் கேள்விப்பட்டதாக தெரிவித்திருந்தார். அவர் மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும் கட்சிக்கு முறையாக கணக்கு கொடுத்திருக்கிறார்களா? கொடுக்க வேண்டும் இல்லையா?என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழக தேர்தலில் 20 பாஜக வேட்பாளர்களுக்கும் ரூ.260 கோடி கறுப்பு பணம் செலவா?  லீக் ஆன  எஸ்.வி.சேகர் பேச்சு

பாஜக ஆதரவாளர்களிடையே பேசிய எஸ்.வி.சேகரின் இந்த பேச்சு லீக் ஆகி விட்டது. சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப்பொருள் ஆனது. ஒரு வேட்பாளருக்கு 13கோடி என்றால் பாஜக சார்பில் 20 வேட்பாளர்கள் களம் இறங்கியிருந்தார்கள். அப்படி என்றால் 20 வேட்பாளர்களுக்கும் 260 கோடி ரூபாய் பாஜக செலவிட்டுள்ளது அம்பலமாகியிருக்கிறது என்று பலரும் தகவல் பரப்பி வருகின்றனர்.

கறுப்பு பணத்தை ஒழிக்கப்போவதாக சொல்லும் பாஜகவின் உண்மை முகத்தை எஸ்.வி.சேகர் தோலுரித்து காட்டிவிட்டார் என்று பலரும் விமர்சிக்கின்றனர்.

எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு பாஜகவினர் யாரும் இதுவரைக்கும் கருத்து தெரிவிக்காததால் அவருன் பேச்சு உண்மையாகவே இருக்கும் என்றே பலரும் சொல்லி வருகின்றனர்.

தமிழக தேர்தலில் 20 பாஜக வேட்பாளர்களுக்கும் ரூ.260 கோடி கறுப்பு பணம் செலவா?  லீக் ஆன  எஸ்.வி.சேகர் பேச்சு

தேர்தலின் போது ஒவ்வொரு கட்சி பிரமுகர்கள் வீட்டிலும் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், எஸ்.வி.சேகர் இப்படி வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பின்னரும் கூட, வருமான வரித்துறை சார்பில் இன்னமும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கொந்தளிக்கின்றனர்.

20 வேட்பாளர்களுக்கும் தலா 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது என்றால், அது யாரால் எங்கிருந்து கொடுக்கப்பட்டது என்று நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்கவேண்டும். எஸ்.வி.சேகர் அழைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்கின்றனர். மேலும், 13 கோடி ரூபாய் பணம் வேட்பாளர்களின் கணக்கில் வரவேண்டும். இல்லையென்றால் கட்சியின் தலைமையின் கணக்கில் வரவேண்டும். அப்படி கணக்கில் வரவில்லை என்றால் ஏன் வரவில்லை? என்கிற கேள்வியை எழுப்புகின்றனர்.