ஓபிஎஸ்சிடம் இருந்து வந்த அவசர அழைப்பு; பரபரத்த பத்திரிகையாளர்கள்

 

ஓபிஎஸ்சிடம் இருந்து வந்த அவசர அழைப்பு; பரபரத்த பத்திரிகையாளர்கள்

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. பழனிச்சாமிக்கு ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதை அறிந்து அதிமுக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் பன்னீர்செல்வம். இதனை அடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் உடன் சென்று பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து, தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து பெற்றுக்கொண்டார் எடப்பாடிபழனிச்சானி.

ஓபிஎஸ்சிடம் இருந்து வந்த அவசர அழைப்பு; பரபரத்த பத்திரிகையாளர்கள்

ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கிறார் என்றும், டிடிவி தினகரனை அவர் சந்திக்க இருக்கிறார் என்றும் தகவல் பரவி வந்த நிலையில், பன்னீர் செல்வத்தின் சகோதரர் காலமானதால் தேனி மாவட்டத்திற்கு விரைந்தார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்சிடம் இருந்து வந்த அவசர அழைப்பு; பரபரத்த பத்திரிகையாளர்கள்

இந்நிலையில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு தேனி மாவட்ட செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ஓபிஎஸ் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று சொன்ன தகவலால், மீண்டும் தர்ம யுத்தம் அறிவிப்பா என்கிற ரேஞ்சுக்கு கற்பனை செய்துகொண்டு, பரபரத்துக்கொண்டு போடியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற அலுவலகத்திற்கு விரைந்தார்கள்.

அங்கே சென்றதும் தயாராக இருந்த வாகனத்தில் ஏற்றப்பட்டனர். ஓபிஎஸ் சந்திப்பு இல்லையா? என்று கேட்டதற்கு, சந்திப்பு உண்டு. ஆனால் இங்கே இல்லை என்று சஸ்பென்ஸ் கூட்டினார்கள்.

ஓபிஎஸ்சிடம் இருந்து வந்த அவசர அழைப்பு; பரபரத்த பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்கள் வாகனம் செல்லம், ஓபிஎஸ்சும் ஒரு வாகனத்தில் பயணம். மேற்கு தொடர்ச்சி மலையில் குட்டை ஏரி , குரங்கணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது அந்த வாகனம். ஒரு மாந்தோப்பில் வாகனம் நின்றது. அப்போதுதான் பத்திரிகையாளர்களுக்கு உண்மை புரிந்தது.

டவ் தே புயலின் தாக்கத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த மாந்தோப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது, மாங்காய்கள் எல்லாம் உதிர்ந்து கிடந்த சிதறிப் போனதால் விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள் இதை நேரடியாக சொல்லி ஊடகங்களில் வெளியிடுவதற்காகத் தான் ஓபிஎஸ் அழைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டனர்.

அரசியல் அதிரடி, மீண்டும் தர்மயுத்தம் என்கிற மாதிரியான நினைப்பில் ஓடிவந்த செய்தியாளர்கள், மாந்தோப்பின் பாதிப்புகளையும், விவசாயிகளின் வேதனைகளையும் பதிவு செய்துசென்றனர்.