ஸ்டாலினை விமர்சனம் செய்ததால் கடுப்பான பெண் எம்.பி.

 

ஸ்டாலினை விமர்சனம் செய்ததால் கடுப்பான பெண் எம்.பி.

கொரோனா இரண்டாவது அலையில் தினசரி கொரோனா பாதிப்பு தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 32 ஆயிரத்தை தொட்டு விட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டதால், மருத்துமனைகளில் படுக்கை பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, மருத்துவர் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என பற்றாக்குறை லிஸ்ட் நீளமாக சென்று கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் கூட்டம் இரவுப்பகலாக காத்திருக்க அவலமும் இருக்கிறது.

ஸ்டாலினை விமர்சனம் செய்ததால் கடுப்பான பெண் எம்.பி.

திமுக அரசு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தாததும், சுகாதாரத்துறையை திறம்பட மேம்படுத்தாததுமே கொரோனா பரவலுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சரியான திட்டமிடல் இன்மையும் கொரோனா போரில் தமிழகம் தோற்றதுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், ஸ்டாலின் வர்றாரு விடியல் தர போறாரு என விளம்பரப்படுத்தினீரே, #விடியல்எப்போதுஸ்டாலின் என நெட்டிசன்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி.,ஜோதிமணி, ‘’தமிழக அரசு பதவியேற்ற ஏழு நாட்களுக்குள் #விடியல்எப்போதுஸ்டாலின் என்று கேட்பவர்கள்,ஏழு வருடமாக தூங்கிக்கொண்டிருந்து விட்டு ஆக்சிஜன் இல்லாமல் தேசமே மூச்சுத்திணறும் போது காணாமலே போய்விட்ட மோடியையும், மத்திய அரசையும் கொஞ்சம் கண்டுபிடித்துக் கொடுத்தால் நன்றாயிருக்கும்.’’என்று ஆவேசமாகிறார்.