25 ஆயிரம் பேரை சொந்த செலவில் அடக்கம் செய்தவர்… மருத்துவ செலவுக்காக அல்லாடும் அவலம்

25  ஆயிரம் பேரை சொந்த செலவில் அடக்கம் செய்தவர்… மருத்துவ செலவுக்காக அல்லாடும் அவலம்

அயோத்தியில் மொஹல்லா கிரி அலி பெக்கில் சைக்கிள் மெக்கானிக்காக இருப்பவர் முகமது ஷெரீப். 83வயதாகும் ஷெரீப் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு மத்திய அரசு விருது வழங்கவில்லை.

சைக்கிள் மெக்கானிக் ஷெரீப்புக்கும் பத்மஸ்ரீ விருதுக்கும் என்ன சம்பந்தம்?

25  ஆயிரம் பேரை சொந்த செலவில் அடக்கம் செய்தவர்… மருத்துவ செலவுக்காக அல்லாடும் அவலம்

கடந்த 25 ஆண்டுகளாக ஆதரவற்றோர் உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்து வந்தவர் ஷெரீப். அதனால்தான், அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என்று பாஜக எம்.பி. லல்லு சிங் பரிந்துரை செய்திருக்கிறார். மத்திய அரசும் விருது அறிவித்திருக்கிறது. ஆனால், விருது இன்னமும் அவருக்கு அளிக்கப்படவில்லை.

25 ஆயிரம் பேரை அடக்கம் செய்த ஷெரீப் தற்போது முதுமையினால் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். தன் மகன் முகமது ஷாகீரின் வருமானத்தில் குடும்பல செலவையே சமாளிக்க முடியவில்லை. அதனால், ஷெரீப்புக்கு மத்திய மாநில அரசுகள் உதவி வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

25  ஆயிரம் பேரை சொந்த செலவில் அடக்கம் செய்தவர்… மருத்துவ செலவுக்காக அல்லாடும் அவலம்

விருதுக்கு நான் பரிந்துரைத்தேனே தவிர அவ்விருந்து வராதது எனக்கு தெரியாது. அதனால் அவ்விருது கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லல்லு சிங் எம்.பி. தெரிவித்திருக்கிறார். ஆனாலும், ஷெரீப் தனக்கு மருத்துவ உதவிகள் வேண்டும் என்பதையே வேண்டுகிறார்.

25 ஆயிரம் உடல்களை தன் சொந்த செலவில் அடக்கம் செய்தவரின் உடலை கவனித்துக்கொள்ள முடியாத நிலை வருத்தப்பட வைக்கிறது.