இறங்கி வந்த ஸ்டாலின்; கூட்டணியில் ஏறிய ‘25’!

 

இறங்கி வந்த ஸ்டாலின்; கூட்டணியில் ஏறிய ‘25’!

இரட்டை இலக்கங்களில் எதிர்பார்த்த மதிமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் வெறும் ரெண்டுதான் என்று ஸ்டாலின் தரப்பில் பேசியவர்கள் சொல்ல, இருவருக்கும் மூச்சே நின்றுவிட்டது போலிருந்திருக்கிறது.

இறங்கி வந்த ஸ்டாலின்; கூட்டணியில் ஏறிய ‘25’!

இருந்தாலும் வைகோ தனது நிர்வாகிகளிடம் பேசியபோது, ஸ்டாலினிடம் நான் தனியாக உட்கார்ந்து பேசியதை வைத்து நம்பிக்கையுடன் இருப்போம். அவர் என்னை அப்படி ஒன்றும் ஒரேஅடியாக கீழே தள்ளிவிட மாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும், ஒரு சீட்டு கூட தராவிட்டாலும் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவோம் என்று வைகோ நிர்வாகிகள் மட்டத்தில் பேசியது ஸ்டாலினை ரொம்பவே செண்டிமெண்டாக டச் செய்துவிட்டதாம். அதனால்தான் அவர் பிரசாந்த் கிஷோரின் பேச்சையும் மீறி ஒரு முடிவெடுத்திருக்கிறாராம்.

இறங்கி வந்த ஸ்டாலின்; கூட்டணியில் ஏறிய ‘25’!

200 தொகுதிகளில் திமுக போட்டியிட்டே ஆகவேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் சொல்ல, ஸ்டாலினும் அந்த முடிவில் உறுதியாகவே இருந்துள்ளார். தற்போது அந்த முடிவில் இருந்து மாறி, அதாவது 200 தொகுதியில் திமுக போட்டி என்ற முடிவில் இருந்து 25 படிகள் இறங்கி வந்திருக்கிறாராம். இதனால் தலா மூணுதான் என்று சொன்னதால் முகம்கொடுத்து பேசாமல் இருந்த கம்யூனிஸ்டுகளும் தற்போது முகம் மலர்ந்திருக்கிறதாம்.

திமுக -175, காங்கிரஸ் -20, மதிமுக -10, விசிக -6, மார்க்சிஸ்ட் -8, சிபிஐ -8, மமக , தவாக, கொமதேக தலா 2 என தற்போதைக்கு திமுக பட்டியல் தயாராகி இருக்கிறது.