கமலிடம் 25 சீட் கேட்கும் ஓவைசி!

 

கமலிடம் 25 சீட் கேட்கும் ஓவைசி!

தமிழகத்தில் முஸ்லீம்களின் வாக்குகள் அதிமுக – திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. ஆனால் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்த நிலை மாறும் என்றே தெரிகிறது.

பீகார் சட்டமன்ற தேர்தலில் கிங்மேக்கராக இருந்த அசாதுதீன் ஓவைசியின் பெயர் தமிழக அரசியலிலும் பரபரப்பாக அடிபடுகிறது.

கமலிடம் 25 சீட் கேட்கும் ஓவைசி!

அகில இந்திய மஜ்லிஸ் இ இடிஹதுல் முஸ்லிம்(AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி., ஐதராபாத்திலும், பீகாரிலும் தவிர்க்க முடியாத தலைவராகிவிட்டார். அடுத்த இவர் தமிழகத்திலும் காலூன்ற முடிவெடுத்துள்ளார். அதற்காக அவர் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல்கூட, ‘’நிறைய பேர் கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது’’ என்று சொல்லி இருக்கிறார்.

ம.நீ.ம. நிர்வாகிகளுடன் ஓவைசியின் நிர்வாகிகளும் பேசி வருவதாக தகவல். மும்பையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், தங்களுக்கு 25 சீட் வேண்டும் என்று கேட்டுள்ளதாக தகவல்.

கமலிடம் 25 சீட் கேட்கும் ஓவைசி!

கமல் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாயிப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அப்படி மூன்றாவது அணி அமைந்தால் கமலுடன் சீமானும் கைகோர்ப்பார் என்று தகவல். மூன்றாவது அணி என்று வருகிறபோது, ஓவைசிக்கு 25 சீட் தர வாய்ப்பில்லை. அதனால், தமிழகத்தில் தனித்தே போட்டியிடலாம். எல்லால் தொகுதிகளிலும் இல்லாவிட்டாலும் முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் மட்டும் நின்றால் கூட ஜெயித்துவிடலாம் என்று கணக்கு போடுகிறாராம் ஓவைசி.

கமலிடம் 25 சீட் கேட்கும் ஓவைசி!

தமிழகத்தில் 10 தொதிகளுக்கு மேல் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துதான் தனித்தே 10 தொகுதிகளில் நின்று வென்று காட்டிவிடலாம் என்றும் ஓவைசி யோசிக்கிறாராம்.

ஆனால், கமலுடன் அவர் சேர்ந்து போட்டியிடுவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள்.

என்னதான், நான் பாஜகவின் பி டீம் அல்ல என்று ஓவைசி சொல்லி வந்தாலும் அவர் பாஜகவின் பி டீம் என்றே மக்கள்மனதில் பதிந்துவிட்டது. அதுபோலவே , நான் பாஜகவின் பி டீம் அல்ல. நேர்மையின் எ டீம் என்று கமல் சொல்லி வந்தாலும் அவர் பிஜேபியின் பி டீம் என்ற பார்வைதான் இருக்கிறது.

அதனால் இருவரும் இணைவதுதான் சரி என்றும் இருவர் கட்சி நிர்வாகிகளூம் விரும்புவதாகவே தகவல்.

கமல் – ஓவைசி கூட்டணியால் முஸ்லீம்களின் வாக்குகளை பறிகொடுக்க வேண்டியிருக்குமே என்று கதிகலங்கி நிற்கிறது திமுக.