“நவம்பர் 25 ஆம் தேதி ருத்ரதாண்டவமாடும் இயற்கை” : அன்றே கணித்த பஞ்சாங்கம் : அதிர வைக்கும் உண்மை!

“நவம்பர் 25 ஆம் தேதி ருத்ரதாண்டவமாடும் இயற்கை” : அன்றே கணித்த பஞ்சாங்கம் : அதிர வைக்கும் உண்மை!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நிவர் புயலாக மாறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்தி வரும் நிவர் புயல், இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

“நவம்பர் 25 ஆம் தேதி ருத்ரதாண்டவமாடும் இயற்கை” : அன்றே கணித்த பஞ்சாங்கம் : அதிர வைக்கும் உண்மை!

இந்நிலையில் தமிழக்தை உலுக்கி வரும் நிவர் புயலை நவகிரகங்களின் இடப் பெயர்ச்சியுடன் ஒப்பிட்டு செய்தி ஒன்று உலா வருகிறது. 2020-2021 -ம் ஆண்டு, சார்வரி வருடத்திய சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தின்படி, 2020ஆம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி சென்னையில் விடிய விடிய மழை பெய்யும் என்று பல மாதங்களுக்கு முன்பே மிக துல்லியமாக பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.

“நவம்பர் 25 ஆம் தேதி ருத்ரதாண்டவமாடும் இயற்கை” : அன்றே கணித்த பஞ்சாங்கம் : அதிர வைக்கும் உண்மை!

புயலாக வரும் இந்த இயற்கை சீற்றத்தால் சென்னை, கடலூர், மாயவரம், திருவாரூர், மதுரை, திருச்சி, ராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஜாதக பலன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என பல ஜோதிடர்கள் கணித்த நிலையில் இந்தாண்டு தொடக்கம் முதலே கொரோனா பாதிப்பு வாட்டி வதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.