இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ… ஈபிஎஸ் வாழ்த்து

 

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ… ஈபிஎஸ் வாழ்த்து

இஸ்லாமிய பெருமக்களின் புனித நாளான ரமலான் நன்னாளில் ஈகை குணமும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் ஓங்கப்பெற்று இறைவனின் அருட்கொடையால் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ… ஈபிஎஸ் வாழ்த்து

ரமலான் மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் இரண்டு கடமைகள் ரமலான் மாதத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. அதாவது சூரிய உதயத்துக்கு முன் உணவு உண்டு, இடையில் அன்னம் தண்ணீர் இல்லாமல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருக்கும் நிகழ்வு ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கிறார்கள். இது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

இதேபோல் ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது வருமானத்தில் 7 சதவீதத்தை தானம் செய்ய வேண்டும் ஜகாத் எனப்படும். இது இருப்போர் இல்லாதவருக்கு கொடுக்கும் நிகழ்வாகும் . அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ உணவு உண்ணக் கூடாது என்கிற தத்துவத்தின் அடிப்படையில்தான் இல்லாத ஒரு ஏழை எளியோருக்கு கொடுக்கிறார்கள்.

முப்பது நாட்கள் நோன்பு கடைப்பிடிக்கும் இந்த மாதத்தில் 5 வேளை தொழுகை உடன் கூடுதலாக தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகையும் தினந்தோறும் இரவில் தொழப்படும். 30 நாட்கள் திரை கணக்கு பார்த்து நோன்பு வைத்து 30வது நாளில் பிறை தெரிந்த மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ரமலான் நோன்பு ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தொடங்கியது. தமிழகத்தில் நேற்று பிறை தென்படாததால் இன்று நோன்பு நாளை ரமலான் பண்டிகையையும் அறிவித்துள்ள தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார். இதையடுத்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.