வன்னிஅரசு, சகாயமீனா ஐஏஎஸ்-ஐ நலம் விசாரித்த அமைச்சர் மா.சு.

வன்னிஅரசு, சகாயமீனா ஐஏஎஸ்-ஐ நலம் விசாரித்த அமைச்சர் மா.சு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னி அரசு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சகாயமீனா ஐஏஎஸ் அவர்களும் கொரோனா தொற்றினால் அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வன்னிஅரசு, சகாயமீனா ஐஏஎஸ்-ஐ நலம் விசாரித்த அமைச்சர் மா.சு.

இந்நிலையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிங் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்றும் கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். அப்போது வன்னி அரசு மற்றும் சகாயமீனா ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார்.

வன்னிஅரசு, சகாயமீனா ஐஏஎஸ்-ஐ நலம் விசாரித்த அமைச்சர் மா.சு.

அது குறித்து அவர், ‘’தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நேற்று புழல், சூரப்பட்டு, மாத்தூர் பகுதிகளின் மருத்துவமனைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிதாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 180 படுக்கைகளும், 86 படுக்கைகைள் கொண்ட ‘கொரோனா சித்த சிகிச்சை மையமும்’ அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளார் சுகாதாரத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

வன்னிஅரசு, சகாயமீனா ஐஏஎஸ்-ஐ நலம் விசாரித்த அமைச்சர் மா.சு.

இன்று அதி காலை கிங் இன்ஸ்டிடியூட் கொரோனா மருத்துவமனையை ஆய்வு செய்தோம். தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வன்னியரசு., சகாயமீனா ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களிடம் உடல்நலம் விசாரித்தோம்.’’ என்று தெரிவித்துள்ளார்.