விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன்.’’என்று தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

மேலும், அருட்தந்தை ஜான் சுரேசு அளப்பெரிய இன உணர்வாளராக விளங்கியவர். தமிழீழத் தாயகத்தின் மீது தீராவேட்கை கொண்டு, விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து, பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும் சமரசமின்றி தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாய் நின்றவராவார்.

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

அருட்தந்தை ஜான் சுரேசு போன்ற எத்தனையோ பெருந்தகைகளை இப்பேரிடர் காலத்தில் இழந்து நிற்கிறோம். இனியும் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் இருக்க ஒவ்வொருவரும் கொரோனா குறித்த விழிப்புணர்வோடும், பொறுப்புணர்வோடும் இருக்க வேண்டுமென உறவுகளைப் பேரன்போடு கோருகிறேன்.’’என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.