’’சிவாஜியின் தோல்வியை விட கமலின் தோல்வி பெரிய தோல்வி கிடையாது’’

 

’’சிவாஜியின் தோல்வியை விட கமலின் தோல்வி பெரிய தோல்வி கிடையாது’’

நடந்து முடிந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கட்சியின் தலைவரான கமல்ஹாசனும் வெற்றி பெறவில்லை. இதனால் கட்சிக்குள் குழப்பம் எழுந்ததால் நிர்வாகிகள் சிலர் வெளியேறி இருக்கிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், கமலின் தோல்வி குறித்து பரபரப்பு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

’’சிவாஜியின் தோல்வியை விட கமலின் தோல்வி பெரிய தோல்வி கிடையாது’’

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், கமல்ஹாசனை விட ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று சொல்லி பரபரக்க வைத்தார். அதையேதான் இப்போது சொல்லி இருக்கிறார்.

‘’என் காலத்தில் கமல்ஹாசனை நல்ல நடிகராகவே தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது அரசியலில் அவரை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அதனால்தான் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஒன்றும் சிவாஜிக்கு நேர்ந்த தோல்வியை விட பெரிய தோல்வி கிடையாது. கமல்ஹாசனின் தோல்விக்கும் காரணம் அவர் சிவாஜி போன்ற பெரிய நடிகர் என்பதால்தான்.

’’சிவாஜியின் தோல்வியை விட கமலின் தோல்வி பெரிய தோல்வி கிடையாது’’

சினிமாவிலும் கமல்ஹாசனை முதல் இடத்திற்கு மக்கள் கொண்டு வரவில்லை. கமல விட ரஜினிக்குத்தான் ஐந்து மடங்கு சம்பளம் அதிகம். அவர் படம்தான் வசூலிலும் முதலிடத்தில் இருக்கிறது. ஒரு வேளை ரஜினி வந்திருந்தால் ஜெயித்திருக்கலாம்.’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘’ இது திராவிட நாடு. இங்கே பிராமண சமூகத்திற்கு அரசியலில் எதிர்காலம் கிடையாது. கமல்ஹாசனின் தோல்விக்கு சாதியும் ஒரு காரணம்தான்’’ என்று தெரிவித்திருக்கிறார்.