தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை பார்வையிட்ட கனிமொழி

 

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை பார்வையிட்ட கனிமொழி

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்து வரும் பல்வேறு விமான நிலைய விரிவாக்கப் பணிகளை இன்று பார்வையிட்டார் கனிமொழி எம்.பி. விமான நிலைய இயக்குனர் என். சுப்பிரமணியன், மேலாளர் எஸ். ஜெயராமன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை பார்வையிட்ட கனிமொழி

தூத்துக்குடி விமான நிலையத்தில் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையில் உள்ளூர் விமான முனையம் வசதியாக அமைக்கப்படுகிறது.

இந்தப்பணிகளை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் இருந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் ஜிண்டால் தூத்துக்குடிவந்து ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை பார்வையிட்ட கனிமொழி

இதன் பின்னர் தூத்துக்குடி மக்களவை தொகுதியின் உறுப்பினர் கனிமொழி தலைமையில் தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்கூடம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

விமான நிலைய விரிவாக்க பணிகள், விமான நிலையத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய கனிமொழி, இரவு நேர விமான சேவையினை தொடங்கும்போது தூத்துக்குடியில் இருந்து டெல்லி, கொழும்புக்கு விமான சேவைகளை தொடங்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார்.