திமுக மகளிரணிக்கு கனிமொழி அவரச உத்தரவு

 

திமுக மகளிரணிக்கு கனிமொழி அவரச உத்தரவு

கொரோனா பெருந்துறை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது இந்த பெரும் தொற்றுக்கு எதிரான போரில் முக்கியமானது. மேலும் திமுக மகளிரணி சகோதரிகள் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி போட்டுக் கொள்வோம் கொரோனாவை வெல்வோம் என்று வலியுறுத்தி இருக்கிறார் கனிமொழி எம்.பி.

திமுக மகளிரணிக்கு கனிமொழி அவரச உத்தரவு

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா காலம் என்பதால் மிக சவாலானதாகவே இருக்கிறது. அதையும் அவர் தீவிர நடவடிக்கைகளினால் சமாளித்து வருகிறரார்.

கொரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாட்டை மீட்க ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்ற பேதங்கள் கடந்து மக்கள் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம்! நோய்த்தடுப்பிற்காக MLAக்கள் அரசினை நாடினால் உடனடியாக உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட இணைந்து நிற்போம் என்று மனம் திறந்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கொரோனா நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு உதவி செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என கொரோனா தடுப்பு பணிகளில் பலரையும் ஈடுபடுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் திமுக மகளிரணியும் தீவிரமாக செயல்பட, மகளிரணி தலைவர் கனிமொழி அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.