ரஜினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற லதா! வைரலாகும் வீடியோ!

 

ரஜினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற லதா! வைரலாகும் வீடியோ!

விஸ்வாசம் படத்திற்கு பின்னர் ரஜினிகாந்தை வைத்து ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார் சிவா. கடந்த ஆண்டு இப் படத்தின் ஷூட்டிங்கின்போது படப்பிடிப்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்துக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் ஓய்வெடுக்க சென்னை திரும்பினார்.

ரஜினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற லதா! வைரலாகும் வீடியோ!

பின்னர் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கடந்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கியது . இதில் நடிகர் ரஜினிகாந்த் , நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு , தடுப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்தது. ரஜினிகாந்தை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

கொரோனா இரண்டாவது அலையினால் மீண்டும் படம் தாமதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக முழுமூச்சாக ஐதராபாத்தில் இருந்து அண்ணாத்த படத்தை முடித்து கொடுத்துவிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற லதா! வைரலாகும் வீடியோ!

படப்பிடிப்பு முடிவடைந்ததால் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். போயஸ்கார்டன் வீட்டின் முன்பு ரஜினியை பேட்டி எடுக்க செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். கொரோனா அச்சத்தினால் ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கவில்லை. அவரது கார் நேரே வீட்டிற்குள் சென்றுவிட்டது.

அங்கே ஆரத்தி தட்டுடன் காத்திருந்தார் லதா ரஜினிகாந்த். அவர் ஆரத்தி எடுத்ததும், கேட்டிற்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களுக்கு கையைத்து வணக்கம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார் ரஜினிகாந்த்.

ரஜினிக்கு லதா ஆரத்தி எடுத்து வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.