’’இதற்கு பெயர்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது..’’

’’இதற்கு பெயர்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது..’’

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நடைபெற்ற துறை ஆய்வு கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில், இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் மூலம் தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் மருத்துவமனைகள், ஏழை-எளியவர்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

மேலும், திருக்கோயில்களுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மற்றும் சித்த மருத்துவமனைகளில் கபசுரக் குடிநீர், முகக்கவசம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

’’இதற்கு பெயர்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது..’’

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அறிவித்துள்ள அமைச்சரின் அறிவிப்பு குறித்து எழுத்தாளரும், திமுக பேச்சாளருமான வே.மதிமாறன், அறநிலையத்துறை அமைச்சர் அன்னதானத்தை எங்கு நிகழ்த்துகிறார் பாருங்கள்? இதற்கு பெயர்தான் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது’ என்று தெரிவித்துள்ளார்

’’இதற்கு பெயர்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது..’’