Home இந்தியா கொரோனா வைரசை அழிக்கும் முக கவசம்: மாணவியின் சாதனை

கொரோனா வைரசை அழிக்கும் முக கவசம்: மாணவியின் சாதனை

கொரோனா ஒன்றாவது அலை இரண்டாவதாக என்பதைத் தாண்டி மூன்றாவது அலை என்ற எச்சரிக்கை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இனி முகக் கவசம் இல்லாமல் மனிதன் வாழ்வது என்பது இயலாத காரியமாகிவிட்டது. இதனால் எத்தனையோ நிறுவனங்கள் எத்தனையோ விதங்களில் முக கவங்களை தயாரித்து வருகிறது.

கொரோனா வைரசை அழிக்கும் முக கவசம்: மாணவியின் சாதனை
கொரோனா வைரசை அழிக்கும் முக கவசம்: மாணவியின் சாதனை

முகக் கவசம் தயாரிப்பதுதான் இப்போது உலகெங்கிலும் பிரதான தொழில் ஆகிவிட்டது. இதில் பிளஸ்டூ மாணவி ஒருவர் தயாரித்துள்ள முக கவசம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் சாதனைகள் கண்டு பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸை அழிக்கும் முக கவசத்தை அவர் கண்டுபிடித்து இருக்கிறார். இதற்கு முன்பு காதுகளைப் பாதிக்காத முகக்கவசம், தலையை திருப்பாமலே பின்னால் வருவதை பார்க்கும் மூக்குக்கண்ணாடி முதலானவற்றை கண்டுபிடித்த மாணவி திகந்திதிகா போஸ், இந்த கொரோனா வைரஸை அழிக்கும் ஒரு முக கவசத்தை கண்டுபிடித்திருக்கிறார்.

மேற்கு வங்கம் புர்பா பர்தமன் மாவட்டத்தில் வசிக்கிறார் திகந்திகா போஸ். பிளஸ் 2 மாணவியான இவர் கொரோனா வைரஸை முகக் கவசம் அணிவதன் மூலம் முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்திருக்கும் முக கவசம் மூன்றடுக்கில் இருக்கிறது. முதல் அடுக்கில் தூசியை வடிகட்டும் மின் காந்த அணுக்கள் உள்ளன. அதை அடுத்து இரண்டாவது அடுக்கின் வழியே காற்று மூன்றாவது அடுக்கில் செல்கிறது. அப்போது அங்குள்ள சோப்பு கரைசல் கொரோனா வைரசை அழித்து தூய்மையான காற்றை சுவாசிக்க வழி செய்கிறது.

கொரோனா வைரசை அழிக்கும் முக கவசம்: மாணவியின் சாதனை

சோப்பு கரைசலுக்கு கிருமியை அழிக்கும் சக்தி இயல்பாகவே உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். கொரோனா பாதித்தவரிடமிருந்து வைரஸ் கிருமி மற்றவர்களுக்கு தொற்றாமல் இருப்பதற்கு இந்த முகக் கவசம் மிக அவசியமாகிறது.

தான் கண்டுபிடித்த இந்தத் கவசத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ள இம்மாணவி, இதற்கு முன்பு மூன்று முறை அப்துல்கலாம் விருதுகளை வென்றிருக்கிறார். காதுகளைப் பாதிக்காது முகக்கவசம், தலையை திருப்பாமல் பின்னால் வருவதை பார்க்கும் மூக்குக்கண்ணாடி முதலானவற்றை கண்டுபிடித்ததற்காக இந்த விருதுகளை அவர் குவித்துள்ளார்.

தற்போது தயாரித்திருக்கும் முகக்கவசம் மும்பை கூகுள் அருங்காட்சியத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. மாணவியின் சாதனைக்கு மேற்குவங்கம் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன.

கொரோனா வைரசை அழிக்கும் முக கவசம்: மாணவியின் சாதனை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...
- Advertisment -
TopTamilNews