ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

 

ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 75 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்தது.

ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

தேர்தலுக்கு பின்னர்தான் முதல்வர் வேட்பாளரை தெரிவிப்பதாக சொல்லி இருந்தது பாஜக தலைமை. இதனால் முதல்வராக இருந்த சர்பானந்த சோனோவாலுக்கும் 50 இடங்களில் பாஜக வெற்றி பெற காரணமாக இருந்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கும் இடையே யார் முதல்வர் என்ற போட்டி நிலவி வந்தது.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஹிமந்த் பிஸ்வா சர்மா(52) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அசாமின் 15ஆவது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றார். அவருக்கும் அவருடையை அமைச்சரவையில் உள்ள 13 அமைச்சர்களூக்கும் ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதுகுறித்து தமிழத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘’அசாமின் முதல்வராக பதவியேற்ற திரு ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.’’என்று தெரிவித்துள்ளார்.