ஈபிஎஸ்க்கு குவியும் வாழ்த்துக்கள்: பாஜகவிடம் இருந்து வந்த முதல் வாழ்த்து

 

ஈபிஎஸ்க்கு குவியும் வாழ்த்துக்கள்: பாஜகவிடம் இருந்து வந்த முதல் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

ஈபிஎஸ்க்கு குவியும் வாழ்த்துக்கள்: பாஜகவிடம் இருந்து வந்த முதல் வாழ்த்து

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளை கைப்பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர இருக்கிறது. இதை எடுத்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்ய அதிமுக எம்எல்ஏ கூட்டம் கடந்த 7ஆம் தேதி அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி , ஓ. பன்னீர்செல்வம் இருவருமே அந்த பதவிக்கு போட்டி போட்டதால் அன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்க முடியவில்லை.

இன்றைய கூட்டத்தில் பெரும்பான்மையான எம்.ஏல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்ததால், 61 எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் சமாதானம் ஆகி, எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக சம்மதித்துள்ளார். அதனால், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

எடப்பாடியார் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், நல்ல முடிவு, சூப்பர் என்று அதிமுகவினர் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், ’வாழ்த்துக்கள் சார் ’என்று தெரிவித்துள்ளார்.