கடுப்பான ஓபிஎஸ் முன்மொழிந்த பெயர்; அதிமுகவில் புதிய திருப்பம்

 

கடுப்பான ஓபிஎஸ் முன்மொழிந்த பெயர்; அதிமுகவில் புதிய திருப்பம்

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய கடந்த 7ஆம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் பிடிவாதமாக இருந்ததால் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டாமல் இன்றைக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே தங்கள் தரப்பில் இருந்து துளி அளவுகூட இறங்கி வராததால், யாரை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பது என்று எம்எல்ஏக்கள் திணறி வருகின்றனர்.

கடுப்பான ஓபிஎஸ் முன்மொழிந்த பெயர்; அதிமுகவில் புதிய திருப்பம்

இன்றைக்கு எத்தனை மணி நேரமானாலும் இழுபறி நீடித்துக் கொண்டே தான் இருக்குமே தவிர இதில் ஒரு முடிவும் எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்ட ஓபிஎஸ், திடீரென்று முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழிந்தார்.

ஓபிஎஸ் திடீரென்று இப்படி சபாநாயகர் பெயரை முன்மொழிந்ததும், அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த விவகாரத்தில் இன்னும் இழுபறி நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.