”என்னைப் பெற்றவளும் என்னால் பெற்றவளும்..”- உருகும் பார்த்திபன்

 

”என்னைப் பெற்றவளும் என்னால் பெற்றவளும்..”- உருகும் பார்த்திபன்

இன்று (9.5.2021) உலக அன்னையர் தினம். இதை முன்னிட்டு உலகம் முழுவதிலும் தாய்மையை, அன்னையின் அன்பை, அருமையை போற்றி வருகின்றனர். இயக்குநர் ஆர். பார்த்திபன் இந்த அன்னையர் தினத்தில் எழுதியிருக்கும் அழகான கவிதை இது. கொரோனா கொடுங்காலத்தில் ஆக்சிஜன் என்ற ஒன்று மனித குலத்தை வதைத்துக்கொண்டிருக்கிறது. அன்னையர் தினத்தில் ஆக்சிஜனையும் ஒப்பிட்டு தனது கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார் பார்த்திபன்.

”என்னைப் பெற்றவளும் என்னால் பெற்றவளும்..”- உருகும் பார்த்திபன்

கருவானது ஒரு தாயால்,
உருவானது பல கருணையால்,
உயர்வானது தாய்மையால்! நான்
உணர்வது இதுவே!

கருணைத்தாய்
தெய்வத்தாய்
தாய்
மூன்றல்ல ஒன்றே

Google map location
ஏதுமின்றி
பால் சுரக்கும்
காம்பறிந்து
சிசு பசியாறுகிறது!

பால் சுரக்க
மார்பென்றாலும்-அன்
பால் சுரப்பது அவள்
மனம்! குணம்!

பூனைக்குட்டிகளுக்கு
பாலூட்டும் புகைப்படத்தில்
இருந்ததொரு நாய்-அதில்
நான் கண்டதோ ஒரு தாய்

தா’எனாமல்
தானாகத் தருபவளே
தாய்

”என்னைப் பெற்றவளும் என்னால் பெற்றவளும்..”- உருகும் பார்த்திபன்

என்னைப் பெற்றவள் மட்டுமல்ல
எல்லைகள் அற்றவளே தாய்

என்னைப் பெற்றவளும்
என்னால் பெற்றவளும்
பெண்ணாய் பெற்றதும்
எனக்குத் தாயே
தாயன்பு
தரமான ஆக்ஸிஜன்!
இப்பேரிடர் காலத்தில்
ஆக்ஸிஜன் வழங்கும் அரசும் நல் உள்ளங்களும்
ஆக்ஸிஜனாய் இயங்கும் மருத்துவர்களும் தாயே!

பல் முளைக்கா பார்ட்டி முதல்
பல் செட் பாட்டிகள் வரை
ஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும்-என்
தாய் தின வாழ்த்துகள்!