முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

 

முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

கொரோனா நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தயாராகி வரும் கோவிட் பராமரிப்பு மையத்தை சென்று பார்வையிட்டார்.

இந்த கோவிட் மையம் முதற்கட்டமாக 300 படுக்கைகளுடன் 10-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த 4 நாட்களுக்குள் தேவையான ஆக்சிஜன் அனுப்பி வைக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியுள்ளார்.

முழு ஊரடங்கு? அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

மேலும், அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார் முதல்வர். ஆலோசனையை அடுத்து தடுப்பு நடவடிக்கையினை தீவிரம் படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதாகவும், அதனால் அடுத்த வாரம் முதல் 2 வாரத்திற்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வருகிறது.