கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?

 

கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?

தேர்தலில் ஒரு கட்சி தோற்றுப் போனால் அக்கட்சியிலிருந்து வெற்றிபெற்றவர் கட்சிக்கு பலரும் அணிதாவுவதும் வழக்கம் தான். தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு வெளியேறுவது சிலரது வழக்கம். தோல்விக்காரணமானவர்களை அடையாளம் காட்டி அந்த ஆத்திரத்தில் சிலர் வெளியேறூவதும் வழக்கம். தனது தோல்விகளை மறைக்க, தோல்விக்கு தான் காரணம் என்பதை மறைக்க, தானாகவே பிறர்மேல் பழியைபோட்டு வெளியேறுவதும் வழக்கம். இதில் டாக்டர் மகேந்திரன் எந்த ரகம் என்று தெரியவில்லை.

கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அக்கட்சியில் துணைத்தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் நேற்று இரவு அறிவித்தார். அதுகுறித்து அவர் 12 பக்க அறிக்கையும் வெளியிட்டார். இதையடுத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மகேந்திரன் வெளியேறியதால் இனி கட்சிக்கு ஏறுமுகம் என்று 2 பக்க அறிக்கை விட்டார்.

கமலும், மகேந்திரனும் இப்படி இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட் அடித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்னர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா என்ற அதிர்ச்சி தகவல் பரவியது. இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் அவசர அவசரமாக, கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் மட்டுமே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கட்சியிலிருந்து விலகி இருக்கிறார். மற்றபடி யாரும் கட்சியை விட்டு வெளியேறவில்லை. தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?

மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடக்கிறது? என்று விசாரித்தபோது, தேர்தல் வியூகத்தினை வகுத்து கொடுத்து திமுக வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறது. ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் இந்த குளறுபடிகளுக்கு காரணம், ஐபேக் மாதிரி ம.நீ.மய்யத்திற்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொத்த சங்க்யா சொல்யூஷன்ஸ் நிறுவனம்தான் என்கிற தகவல் வருகிறது. சங்க்யா சொல்யூஷனால்தான் கமீலாவும் வெளியேறிவிட்டார். இப்போது மகேந்திரன் வெளியேறி இருக்கிறார் என்கிறார்கள்.

மகேந்திரன் என்ன சொல்கிறார்?

12 பக்க அறிக்கையில் மகேந்திரன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள்: ’’ஜனநாயக முறைப்படி சென்று கொண்டிருந்த கட்சியின் நடவடிக்கையில் மாறுதல் ஏற்பட்டது சங்க்யா சொலியேசன்ஸ் இன் தலைவர் மற்றும் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் முக்கிய ஆலோசகரும் இணைந்து கட்சியின் நிர்வாகிகள், மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் இடம் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர்.

கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?

அரசியல் ஜனநாயகம் தூக்கி எறியப்பட்டு பல புதிய பழக்கங்கள் கையாளப்பட்டது. கட்சி மேடையில் தலைவருக்கு மட்டும் தனி இருக்கை. தலைவரின் அறிக்கைகள், கட்சி எடுக்கின்ற முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் என எதையும் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு எதேச்சதிகாரம் நிறைந்த ஒரு அதிகார மையமாக இயங்கத் தொடங்கியது. இவை அனைத்தையும் சங்கத்தின் தலைவரும் தலைவரின் முக்கிய ஆலோசகரும் இணைந்து தலைவருக்கு இது போன்ற புதிய தவறான அணுகுமுறைகளை கையாள சொல்வதாகவே நான் நினைத்திருந்தேன். எனவே இதுகுறித்து தலைவரிடம் சேலத்தில் 2021 ஜனவரி முதல் வார பிரச்சாரத்தின் போது மறுபடியும் எனது கருத்தினை ஆதங்கத்தையும் மிகுந்த மனக் கவலையுடன் எடுத்துரைத்தேன்.

அப்போதும் கூட தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நாம் தேர்தல் வரை இவர்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்குப் பிறகு நானே அவர்களை வெளியே அனுப்பி விடுகிறேன் என்று மீண்டும் எனக்கு உறுதியளித்தார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் இப்பிரச்சனையை தலைவர் இடத்தில் நான் எடுத்துச் சொன்ன பிறகும் கூட அமைதியாக இருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டு, எனது உணர்வை போலவே பிற பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களும் கவலை கொண்டன. ர் ஆனால் தலைவர் ஆணையின்படி மற்ற நிர்வாகிகள் அனைவரிடமும் நிலைமையை எடுத்துச் சொல்லி அவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து தலைவரின் முடிவே இறுதியானது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?

இருப்பினும் யாரிடம் கூட்டணி வைத்துக் கொள்ளப் போகின்றது என்கின்ற ஒரு அடிப்படைத் தகவலை கூட நிர்வாக, செயற்குழு என யாரிடமும் தெரிவிக்காமல் வைத்திருந்து வெளியே தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வியூகங்களை வகுத்து அதை முறையாக களத்தில் செயல்படுத்தவும் நேரம் குறைவாக இருக்கின்றது போன்ற எவ்வித கவலையும் இன்றி தலைமை இருந்த ஒரு சூழல் கட்சிக்கு பெரும்
பின்னடைவாக இருந்தது.

பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடையே பெரிய நம்பிக்கையை பெற்று மாற்று அரசியல் கட்சியாக மக்கள் நீதி மையம் உருவெடுத்த பின்னரும்கூட 234 தொகுதிகளில் 100 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது பொது வெளியிலும் ஊடகங்களிலும், கட்சி அபிமானிகள், கட்சி தொண்டர்கள் மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

ஆதங்கமும் கவலையும் எனக்கும் இருந்தாலும் எப்போதும்போல் கட்சியின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் அதை வெளிப்படையாக என்னால் யாரிடமும் தெரிவிக்க இயலாமல் ஒரு சூழல் இருந்தது. ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேசப்பட்டது. ஆனால் மறுபக்கம் கட்சியினரிடம் தேர்தலில் போட்டியிட வேட்புமனு, இதற்கான விண்ணப்பங்களும் பணமும் பெறப்பட்டு நேர்காணலுக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து வந்தனர். உண்மைகள் மறைக்கப்பட்டு ஒரு கண்துடைப்பு நாடகம் ஆகவே நடைபெற்றது எனக்கு அதிர்ச்சி அளித்தது. வேட்பாளர் அறிவிப்பு மிக விரைவில் அறிவித்து அவர்கள் தங்கள் தொகுதிகளில் பிரச்சார வேலைகளை துவங்கியிருக்க வேண்டும். ஆனால் சங்க்யாவின் தலைவர் மற்றும் தலைவர் கமலஹாசன் அவர்களின் முக்கிய ஆலோசகரின் ஆலோசனை கேட்க கூட்டணியில் உருவான பிறகும் கூட தனது கட்சி வேட்பாளர்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் மிகவும் தாமதமாக தேர்தலுக்கு அது நாட்களுக்கு முன்னர்தான் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது

கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?

இந்த கால தாமதம் வேட்பாளர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் தங்கள் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் தேர்தல் பணிகளை செய்வதற்கு இயலாத ஒரு சூழலை ஏற்படுத்தியது. அதுவே கட்சியின் தோல்விக்கு இன்னொரு காரணமாக இருந்தது. இதற்கு பிறகு தலைவர் அவர்கள் போட்டியிட உள்ள தொகுதி குறித்து பேச்சு எழுந்தபோது தலைவர் அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது அவர்கள் தெரிவிக்கப்படவில்லை.

நான் தலைவர் அவர்கள் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட உள்ளார் என்றால் அவர் சென்னை வேளச்சேரி போன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்கிற எனது கருத்தை முன்வைத்தேன். இரண்டு தொகுதி என்றால் கோவையில் போட்டியிடலாம் என்றேன். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் பிறகும் இறுதியாக தேர்தலுக்கு 4 வாரம் மட்டும் உள்ள நிலையில் மார்ச் 11 தலைவர் அவர்கள் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் கோவையில் போட்டியிடுகிறார் என்று சங்க்யாவின் தலைவரும், தலைவர் அவர்கள் ஆலோசகருமாக முடிவெடுத்து நிர்வாகியிடம் அறிவிக்கப்பட்டது.

இவ்வளவு நடந்த பின்னரும் கூட தலைவர் பலமுறை கூறியபடி பிரச்சார அலுவலகமான சங்கியா சொல்லி தேர்தல் முடிந்த பிறகாவது கட்சி விவகாரங்களில் தலையிடாமல் செயல்படுவார்கள் என்று நினைத்து ஒரு மாத காலமாக காத்திருந்தேன்.

ஆனால் தவறு செய்த சங்க்யான் தங்களது தவறுகளை மறைத்து திசைதிருப்பி அதை கட்சியினர் மற்றும் அதன் செயலாளர்களின் தவறு போல சித்தரித்து அதை தலைவரையும் நம்ப வைத்து இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும் தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை.

கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?


மாறிவிடுவார் என்கின்ற நம்பிக்கை இல்லை. இந்த சூழலில்தான் என்னை மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகுவது என்ற கடினமான முடிவினை மிகக்கவனமாக எடுக்க வைத்திருக்கிறது. ஏனெனில் ஒரு அரசியல் கட்சி என்பது சாமானியர்கள் கட்சியாகவும் ஜனநாயக கட்சி முறைப்படியும் எதிர் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அமைந்திட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்ட நாம் நமது கட்சியில் இருந்து விலகி செல்லும் நேரத்தில் கூட தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது இந்த தன்னிச்சையாக முடிவெடுக்கும் போக்கினையும் சங்க்யா ஷொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தையும் அதன் ஆலோசகர்களையும் மட்டும் நம்பி கட்சி உறுப்பினர் அனைவரின் மீதும் களங்கத்தை ஏற்படுத்தி பலிகடாவாக ஆக்க அணுகுமுறையில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் செல்கின்றேன்.

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தன்னை சுற்றி முகஸ்துதி செய்யும் தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொண்டு யாருடைய ஜனநாயக ரீதியிலான ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்ளவும் அதே அணுகுமுறையை தொடர்ந்து மேற்கொண்டு அது அவருக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தாலும் அத்தனையும் நான் அப்போது பாராட்ட தயாராக இருப்பேன். ஆனால் எனக்கு தெரிந்த தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கொள்கைக்காக எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும் அனைத்து நல்ல தலைமை பண்புகளையும் கொண்ட நம்மவர் ஆக மறுபடியும் மாறி செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகின்றேன். அந்த மாற்றம் இன்று நான் வெளியே செல்வதன் மூலம் ஏற்பட்டு விட்டால் அதுவே நான் என் கட்சிக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

தலைவர் கமல்ஹாசன் அவர்களால் நான் அரசியலுக்கு அடியெடுத்து வைத்து இருந்தாலும் மக்கள் நீதி மையம் கட்சி யின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் உற்சாகமும் உத்வேகமும் தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு பெரிய தோல்விகளை சந்திப்பதற்கான வலிமையை கொடுத்தது அதற்காக நான் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு நிர்வாகிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கு உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும் காந்தியார் சொன்னது நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள் என்பதற்கேற்ப சிறப்பாகவும் அறத்துடனும் செயல்படுவேன் என்று உறுதியுடன் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விடை பெறுகிறேன்.’’

இதற்கு கமல் என்ன சொல்கிறார்?

மகேந்திரனின் 12 குற்றச்சாட்டுகளூக்கு கமல்ஹாசன் வெளியிட்ட 2 பக்க விளக்க அறிக்கையில், ’’சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெரும் கனவையும் முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்படும் களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்தே இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டு துரோகிகளை களை எடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி செய்ய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன்.

கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களை எடுத்துக் கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல பேரை தலையெடுக்க விடாமல் செய்தது இவரது சாதனை.

நேர்மை இல்லாதவர்களும், திறமை இல்லாதவர்கள் வெளியேறும்படி மக்கள் நீதி மையத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர் .உண்மையும் நேர்மையும் தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார். தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார்.

ஒரு களையே தன்னை களை என்று புரிந்து கொண்டு தன்னைத் தானே விலக்கிக் கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை . நான் செய்த தவறுகளை மறைக்கவோ மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை.

என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊரறிந்தது. தோல்வியின் போது கூடாரத்தை பிடித்துக் கொண்டு ஓடும் கோளைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிது மாற்றம் இல்லை. மண் மொழி மக்கள் காக்க களத்தில் நிற்கிறோம்.’’என்று தெரிவித்துள்ளார்.

கமலும், மகேந்திரனும் இரவில் அடுத்தடுத்து அடித்த டார்ச்லைட்! மக்கள் நீதி மய்யத்தில் என்ன நடந்தது?

யார் அந்த ‘சங்க்யா சொல்யூஷன்ஸ்’?அடுத்து என்ன?

விஜய் டிவி மகேந்திரனும், சுரேஷ் அய்யரும் இணைந்துதான் ‘சங்க்யா சொல்யூஷபன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். கமீலா, மகேந்திரனை தொடர்ந்து கட்சியில் இருந்து இன்னும் பல நிர்வாகிகள் வெளியேறப் போவதற்கும் சங்க்யா சொல்யூஷன்ஸ்தான் காரணமாக இருக்கப்போகிறார்கள் என்கிறார்கள் மநீமய்யத்தினர் சிலர். அதே சமயம், கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லவும், கட்டுக்கோப்பாக வைக்கவும் சங்க்யாவுடன் தான் கமல் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார். நிச்சயம் குளறுபடி இல்லாமல் கட்சி தொடர்ந்து வெற்றி நடைபோடும் என்றும் சிலர் மநீமய்யத்தினர் சொல்கிறார்கள்.