புதிய அமைச்சரவையின் மூத்த அமைச்சரும், இளைய அமைச்சரும்

 

புதிய அமைச்சரவையின் மூத்த அமைச்சரும், இளைய அமைச்சரும்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக புதிய அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் முதல்வர் ஸ்டாலின் தவிர்த்து மற்றுமுள்ள 33 எம்.எல்.ஏக்களில் 14 பேர் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள் ஆவர். எதிர்முகாம் அதிமுகவில் இருந்த வந்த 8 பேர் ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இதில், 7 பேர் அதிமுகவில் அமைச்சர்களாக இருந்தவர் ஆவர்.

புதிய அமைச்சரவையின் மூத்த அமைச்சரும், இளைய அமைச்சரும்

திமுகவின் 33 அமைச்சர்களில் கீதாஜீவன், கயல்விழி செல்வராஜ் 2 பேர் மட்டுமே பெண்கள். புதிய அமைச்சரவையில் மொத்தம் 15 பேர் புதுமுகங்கள் ஆவர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் மூத்த அமைச்சர் துரைமுருகன்(வயது 82) ஆவார். இளைய அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்(வயது 36.

புதிய அமைச்சரவையின் மூத்த அமைச்சரும், இளைய அமைச்சரும்

இதில் துரைமுருகன் வயதில் மட்டும் மூத்த அமைச்சர் அல்ல; அனுபவத்திலும் கூட.வேலூர் மாவட்டம் கேவி குப்பம் காங்குப்பம் கிராமத்தில் பிறந்த துரைமுருகன், எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்தவர். திமுகவில் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கைத்தறித்துறை, சட்டம் மற்றும் சிறைத்துறை, வனத்துறை அமைச்சராக இருந்தவர். காட்பாடியில் தொகுதியில் 6முறையாக வெற்றி பெற்றிருக்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியின் எம்.பியாக இருக்கிறார்.

புதிய அமைச்சரவையின் மூத்த அமைச்சரும், இளைய அமைச்சரும்

ராசிபுரம்(தனி) தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனார் டாக்டர் மதிவேந்தன்(வயது36). எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்துள்ள இவர் டாக்டர் பணி செய்து வந்தார். சிவரஞ்சனியை மணந்த இவருக்கு 2வயதில் பெண் குழந்தை இருக்கிறது.