’’நான் உயிருடன் இருக்கிற விஷயமே யாருக்கும் தெரியல’’-வேதனையில் வாழ்ந்த நடிகர்

 

’’நான் உயிருடன் இருக்கிற விஷயமே யாருக்கும் தெரியல’’-வேதனையில் வாழ்ந்த நடிகர்

’’வாடி பட்டி சந்தையிலே..’’, ’’என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…’’, ‘’அத்தை பெத்த மல்லிகைப்பூ.. என் ஆசைக்கேத்த முல்லப்பூ..மாம்பழ கன்னத்திலே…’’, ‘’வக்கிறேன் வைக்கிறேன்னு சொல்லிபுட்டு வைக்காமலே போறீங்களே ராசாவே..’’போன்ற தெம்மாங்கு பாடல்கள் மூலம் உலகம் முழுதும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் டி.கே.எஸ். நடராஜன். அவர் உடல் நலக்குறைவினால் தனது 92ஆவது வயதில் நேற்று காலமான செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

’’நான் உயிருடன் இருக்கிற விஷயமே யாருக்கும் தெரியல’’-வேதனையில் வாழ்ந்த நடிகர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்தடியில் பிறந்தவர் நடராஜன். 15வயதில் இருந்து டி.கே.எஸ். நாடகக்குழுவில் சேர்ந்து நடித்து வந்ததால், இவர் டி. கே. எஸ். நடராஜன் ஆனார். சென்னை கே.கே. நகரில் காசி தியேட்டர் அருகில் தனியாக வாழ்ந்து வந்தார். குடும்பத்தைப் பற்றி அவர் யாரிடமும் பேச மறுத்தார். சென்னையில் சொந்த வீடு இருந்தும் ஒரு கஷ்ட காலத்தில் அதை விற்றுவிட்டார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்,ராமராஜன், கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்தாலும் அதற்கு அடுத்தக்கட்ட நடிகர்களுடன் நடிக்காதது குறித்தும், தனது வாழ்க்கை குறித்தும் அவர் பலரிடம் வேதனையாக பேசி வந்துள்ளார்.

நடிகர் ’கயல்’தேவராஜிடம் அவர் பேசியபோது, ’’நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன். பெரும்பாலும் பொம்பளை வேஷம் தான். அதுக்காகவே நான் பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். சில நடிகைகளுக்கும் நான் பரதம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அதனால்தான் ’வருஷம் 16’ படத்தில் குஷ்புவுக்கு தான் சொல்லித்தரும் மாஸ்டராக நடிக்க வைத்தனர்.

’’நான் உயிருடன் இருக்கிற விஷயமே யாருக்கும் தெரியல’’-வேதனையில் வாழ்ந்த நடிகர்

எம்ஜிஆர் கூட நேற்று இன்று நாளை, பல்லாண்டு வாழ்க, நாளை நமதே, நீதிக்கு தலைவணங்கு, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், இதயக்கனி உள்ளிட்ட பல படங்களில் நடிச்சிருக்கேன். அவர் முதலமைச்சரான பிறகு, ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். வேண்டாம்னு சொல்லிட்டேன்.

சிவாஜி கூட எங்கள் தங்க ராஜா, வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் படங்கள்ல நடிச்சிருக்கேன். ரஜினியுடன் குப்பத்துராஜா, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், நான் சிகப்பு மனிதன், தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட படங்களிலும் நடிச்சிருக்கேன். கமல் கூட காக்கி சட்டை, சத்தியா ,மகராசன் படங்கள் நடிச்சிருக்கேன். கார்த்தி கூட நடிச்சிருக்கேன். ஆனால் இளைய தலைமுறை நடிகர்களுடன் நான் நடிக்கல. அதுக்கு காரணம் இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் உயிருடன் இருக்கிற விஷயமே யாருக்கும் தெரியல’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

’’நான் உயிருடன் இருக்கிற விஷயமே யாருக்கும் தெரியல’’-வேதனையில் வாழ்ந்த நடிகர்

’’நாடகங்களில் நடித்த காலத்தில பாட்டு கத்துகிட்டேன் இது எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட சங்கர் கணேஷ், வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் என்னை பாட வச்சார். ’என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ என்ற பாடலை எழுதி பாடினேன். பட்டி தொட்டி எல்லாம் அந்த பாட்டு பிரபலமாகி, இந்த பாட்டு இல்லாத மேடை கச்சேரி இல்லை என்று சொல்லலாம். இந்த பாட்டை மட்டுமே பாடி கைதட்டல் வாங்கிய பிறகு, ‘ என்னடி முனியம்மா இசைக்குழு’ ஆரம்பிச்சு வெளிநாடுகளுக்கு எல்லாம் போய் பாடிக்கிட்டு இருந்தேன். இப்ப வந்த கலை நிகழ்ச்சி மட்டும் தான் எனக்கு சோறு போட்டு கிட்டு இருக்கு’’ என்று கூறிக் கொண்டு வந்துள்ளார்.

பேய் வீடு படத்தில் ’’அத்த பெத்த மல்லிகை பூ’’ பாடலை எழுதி பாடி இருக்கிறேன். ’நம்ம ஊரு நாயகன்’ படத்தில் செந்திலுக்கு ’வாடிப்பட்டி சந்தையிலே’ பாடலையும் பாடி இருக்கிறேன். ராமராஜன் நடித்த காவலன் படத்துல ‘’வக்கிறேன் வைக்கிறேன்னு சொல்லிபுட்டு வைக்காமலே போறீங்களே ராசாவே..’’என்று பாடுனேன். ஆனா அந்த பாட்டை படமாக்கல.

’’நான் உயிருடன் இருக்கிற விஷயமே யாருக்கும் தெரியல’’-வேதனையில் வாழ்ந்த நடிகர்

அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் ’என்னடி முனியம்மா’ பாட்டு ரீமிக்ஸ். என்னையும் அதுல நடிக்க வச்சாங்க. அதுக்கு பிறகு யாரும் என்னை நடிக்க கூப்பிடல’’ என்று சொல்லி வேதனைப்பட்டுள்ளார் நடராஜன்.

நடராஜன் பாடிய வாடிப்பட்டி சந்தையிலே பாடலில், அடி என்னடி நான் செய்வேன் எத நெனச்சு அழுவேன்.. தொண்டைக்குள்ள துக்கம் இப்ப அடைக்குது ஒரு பக்கம்.. என்ற வரிகளே அவரது கடைசிக்காலங்களாக இருந்திருக்கிறது.