தம்பிக்கு நன்றி சொன்ன உதயநிதி

 

தம்பிக்கு நன்றி சொன்ன உதயநிதி

திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததற்காகவும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் தான் வெற்றி பெற உழைத்ததற்காகவும் தனது சித்தப்பா மு.க.தமிழரசு மற்றும் தம்பி அருள்நிதி்யை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி. மேலும், தனது மாமா அமிர்தத்தை சந்தித்து தேர்தலில் தான் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து பெற்றுக் கொண்டார்.

தம்பிக்கு நன்றி சொன்ன உதயநிதி

இதுகுறித்து அவர், தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்ட மு.க.தமிழரசு சித்தப்பாவை சந்தித்து வாழ்த்து பெற்றேன். நான் வெளியூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் எனக்காக வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு பணிகளை ஒருங்கிணைத்த சித்தப்பா அவர்களுக்கு அன்பும்-நன்றியும் என்று தெரிவித்துள்ள உதயநிதி,

தம்பிக்கு நன்றி சொன்ன உதயநிதி

கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக சென்னையில் அம்பத்தூர், ராயபுரம் தொகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு பணிகளை மேற்கொண்ட அன்புத்தம்பி அருள்நிதி அவர்களை நேரில் சந்தித்து என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

தம்பிக்கு நன்றி சொன்ன உதயநிதி

மேலும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் அமிர்தம் மாமா அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன். என்னை பெருமையோடு வாழ்த்தி மகிழ்ந்த மாமா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அன்பும், நன்றியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தம்பிக்கு நன்றி சொன்ன உதயநிதி