உதயநிதியின் அரசியல் பணிகள்… மனம் திறந்த திருமா

 

உதயநிதியின் அரசியல் பணிகள்… மனம் திறந்த திருமா

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட வென்றார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி. இது அவருக்கு முதல் தேர்தல் முதல் வெற்றி. மேலும், புதிய அமைச்சரவையில் இடம்பெறப்போகிறார் என்றும் பேசப்படுகிறது.

உதயநிதியின் அரசியல் பணிகள்… மனம் திறந்த திருமா

இந்நிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள், திமுக சீனியர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து திருமாளவன், ‘’திமுக இளைஞர் அணி தலைவரும் சேப்பாக்கம் தொகுதியின் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினருமான அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவரது அரசியல் பணிகள் வெற்றிகரமாக அமைய எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்’’என்று தெரிவித்துள்ளார்.